இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்து இருக்கிறார். இந்த படம் இந்தியில் இந்தியில் உருவாகி பேன் இந்திய படமாக தற்போது வெளியாகி இருக்கிறது. பல சர்ச்சைகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் கேரளாவில் அல்லா தான் உலகத்திலேயே உயர்ந்த கடவுள். ஹிஜாப் அணிந்து கொண்டால் யாரும் பாலியல் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று கல்லூரி ஹாஸ்டலில் இருக்கும் இந்து- கிறிஸ்தவ மாணவிகளை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுகிறார்கள். பின் அவர்களை இஸ்லாமிய இளைஞர்கள் மூலம் காதலிக்க வைத்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த பெண்களை சிரியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

Advertisement

அங்கு அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளாவும், பாலியல் தொழிலும் ஈடுபடுத்துகிறார்கள். இறுதியில் அவர்கள் மதவெறியில் இருந்து விடுவிக்கப்பட்டார்களா? அந்த பெண்களுக்கு விடுதலை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக பல எதிர்ப்புகள் நிலவியது.

சமீபத்தில் சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த அயோத்தி படமும் மத நல்லிணத்தை உருவாக்கி இருந்தது என்று பாராட்டுகளை குவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது தி கேரளா ஸ்டோரி படமும் வெளியாகி இருக்கிறது. ஆனால், இது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

நிறை:

உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதை

Advertisement

கதைக்களத்தை இயக்குனர் கொண்டு சென்ற விதம் அருமை

பின்னணி இசையும் ஒளிப்பதிவு பக்கபலம்

குறை:

நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது

முஸ்லிம் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் நிலவி இருக்கிறது.

Advertisement