அருள் அண்ணாச்சியின் உண்மையான வயது எவ்ளோ தெரியுமா ? அவரின் ஒரே மகளுக்கு பிரம்மாண்டமாய் நடந்த திருமணம்.

0
957
arul
- Advertisement -

பொதுவாகவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களும் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும். இந்த விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் மட்டும் இல்லாமல் பொருள்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடும். அதிலும் நடிகர் நடிகைகள் பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளதை நாம் பார்த்துளோம். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒரு விளம்பரம் தான் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம். தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாதா இடமே இல்லை. ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை என பல பொருட்கள் உள்ள கடை சரவணா ஸ்டோர்ஸ்.

-விளம்பரம்-

பேஸ்டு பேஸ்டு பேஸ்டு என்று அணைத்து தொலைக்காட்சிகளிலும் பேஸ்டு கடைக்கான விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்னேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து இருக்கிறார் அருள். இந்த விளம்பரத்தில் நடித்த சரவணா அருளை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து இருந்தார்கள்.

- Advertisement -

இருந்தாலும் அவர் அசராமல் ஹன்சிகா, தமன்னா என்று பல நடிகைகளுடன் நடனமாடி இருந்தார். விளம்பரத்தில் கலக்கிய நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் சினிமாவிலும் களம் இறங்கி இருக்கிறார். இவர் நடித்து வரும் படத்தை பிரபல சீரியலை இயக்கிய இரட்டை இயக்குனர் ஜேடி- ஜெர்ரி தான் இயக்கி இருக்கின்றனர். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.

திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இசையமைத்திருக்கிறார். எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த நிலையில் படத்தை ஜூலை மாதம் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகள் வெளியானது.

-விளம்பரம்-

இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை மாபெரும் தொகைக்கு வாங்கி படத்தை தமிழகத்தில் மதுரை அன்புச் செழியன் வெளியிட்டு இருக்கிறார். முதல் படத்திலியே அதிக பணம் கொடுத்து பெறப்பட்ட படம் மற்றும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற பெருமை லெஜண்ட் சரவணனுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.சிலர் அண்ணாச்சியின் முயற்சியை பாராட்டி இருக்கின்றனர். சிலர் அவர் நடிப்பை கழுவி ஊற்றி வருகின்றனர்.

உங்கள் நண்பர்கள் குழு உடன் போங்கள், சத்தமாக சிரியுங்கள், இந்த படம் மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர், உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அண்ணாச்சியை படத்தில் இளமையாக காட்ட முயற்சி செய்து இருந்தாலும் உன்மையில் இவருக்கு 51 வயது ஆகிறதாம். அதிலும் இவரின் மகளுக்கு திருமணமே ஆகிவிட்டது. அதையும் படு பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார் அருள் அண்ணாச்சி.


Advertisement