ITC”யில் சூட் ரூம் – 30 கேரவன் – இசை வெளியிட்டு விழாவிற்கு சும்மா வந்து செல்ல நடிகைகளுக்கு அள்ளி கொடுத்துள்ள லெஜண்ட்.

0
490
- Advertisement -

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு நடிகைகளுக்கு கோடி கோடியாய் லெஜன்ட் சரவணன் அருள் கொட்டிக் கொடுத்து இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒரு விளம்பரம் தான் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம். தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாத இடமே இல்லை. ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை என பல பொருட்கள் உள்ள கடை தான் சரவணா ஸ்டோர்ஸ். தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள்.

-விளம்பரம்-
Related image

அதிலும் பேஸ்டு பேஸ்டு பேஸ்டு என்ற பாடல் மூலம் அணைத்து தொலைக்காட்சிகளிலும் பேஸ்டு கடைக்கான விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்னேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து இருந்தவர் அருள். இந்த விளம்பரத்தில் நடித்த சரவணா அருளை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து இருந்தார்கள்.

- Advertisement -

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம்:

இருந்தாலும் இவர் அசராமல் ஹன்சிகா, தமன்னா என்று பல நடிகைகளுடன் நடனமாடி இருந்தார். விளம்பரத்தில் கலக்கிய நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது சினிமாவிலும் களம் இறங்கி இருக்கிறார். இவர் நடித்து வரும் படத்தை பிரபல சீரியலை இயக்கிய இரட்டை இயக்குனர் ஜேடி- ஜெர்ரி தான் இயக்கி இருக்கின்றனர். அதோடு இவரின் கடை விளம்பரத்தையும் இவர்கள் தான் இயக்கி இருந்தார்கள். சரவணன் அருள் நாயகனாக நடித்த படத்திற்கு தி லெஜன்ட் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.

தி லெஜன்ட் படம்:

இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் ஊர்வசி ரவுட்லே நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து இருக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து இருக்கிறது.

-விளம்பரம்-

டிரைலர் வெளியீட்டு விழா:

இந்த நிலையில் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நடிகைகளை இறக்க கோடிகோடியாய் லெஜண்ட் சரவணன் அருள் கொட்டியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு முன்னணி நடிகைகள் 10 பேரை கிளுகிளு உடைகளில் வந்து ரசிகர்களை கூழாக்கி இருக்கிறார் புது நடிகர் சரவணன் அருள். படத்தின் நடிகை ஊர்வசி ரௌடலாவிற்கு டிரைலர் வெளியீட்டு விழாவில் கவர்ச்சி உடையில் வந்து செல்வதற்கு மட்டுமே ஒரு கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார். ஊர்வசி அடுத்தபடியாக பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவிற்கு 4 மணி நேரம் நிற்பதற்கு 65 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார்.

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள்:

படத்தில் நடிக்கவில்லை என்றாலும் ஏற்கனவே தனது விளம்பரங்களில் நடித்த ஹன்சிகாவிற்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. நடிகை தமன்னா சினிமாவில் மார்க்கெட் இல்லை என்றாலும் ஒரு காலத்தில் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்ததற்காக 25 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. பின் ஸ்ரத்தா, ராய் லட்சுமி உட்பட பல நடிகைகளுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிக் பாஸ் யாஷிகா கவர்ச்சி உடையில் வந்திருந்த நிலையில் எட்டு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமே இல்லை என்றாலும் டிம்பிள் ஐயாதி, ஸ்ரீலிலா நடிகைகளுக்கு தலா 5 லட்சம் கொடுத்து இருக்கிறார்.

சொகுசு ஹோட்டல்:

இப்படி இவர் அழைத்து வந்திருந்த 10 நடிகைகளுக்கும் ஐடிசி ஹோட்டலில் சூட் ரூம் புக் செய்திருந்தார். ஒரு அறைக்கு ஒரு நாளைக்கு 35 ஆயிரம் என்ற தொகையில் 20 ரூம்கள் புக் செய்திருந்தார். இதுதவிர நேரு விளையாட்டு அரங்கில் விழாவில் கலந்து கொண்ட நடிகைகள் ஓய்வு எடுக்க 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொகுசு வசதி கொண்ட கேரவன் புக் செய்திருக்கிறார். இப்படி படத்தின் திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்து நடிகைகளை சரவணா அருள் களமிறக்கி இருந்தாலும் அரங்கில் பார்வையாளர்கள் இல்லை என்பதுதான் உண்மை.

Advertisement