‘உங்கள troll பண்றவங்கள பத்தி என்ன நினைக்கிறீங்க’ ஆடியோ லாஞ்சில் கூலாக பதில் அளித்த தி லெஜெண்ட் அருள்- வைரலாகும் வீடியோ.

0
540
legand
- Advertisement -

தி லெஜன்ட் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் அருள் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒரு விளம்பரம் தான் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம். தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாத இடமே இல்லை. ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை என பல பொருட்கள் உள்ள கடை தான் சரவணா ஸ்டோர்ஸ். தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள்.

-விளம்பரம்-
Related image

பேஸ்டு பேஸ்டு பேஸ்டு என்று அணைத்து தொலைக்காட்சிகளிலும் பேஸ்டு கடைக்கான விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்னேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து இருக்கிறார் அருள். இந்த விளம்பரத்தில் நடித்த சரவணா அருளை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : ‘எனக்கு மட்டும் தான் Sarcastic ஆ சொல்ற மாதிரி தெரியுதா’ – விஜய் குறித்து கமல் பேசியதை கேலி செய்யும் ரசிகர்கள். இந்த ஒரு வார்த்தை தான் காரணம்.

- Advertisement -

தி லெஜன்ட் படம்:

இருந்தாலும் அவர் அசராமல் ஹன்சிகா, தமன்னா என்று பல நடிகைகளுடன் நடனமாடி இருந்தார். விளம்பரத்தில் கலக்கிய நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது சினிமாவிலும் களம் இறங்கி இருக்கிறார். இவர் நடித்து வரும் படத்தை பிரபல சீரியலை இயக்கிய இரட்டை இயக்குனர் ஜேடி- ஜெர்ரி தான் இயக்கி வருகின்றனர். அதோடு இவரின் கடை விளம்பரத்தையும் இவர்கள் தான் இயக்கி இருந்தார்கள். மேலும், இவர்கள் அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தி லெஜன்ட் படத்தின் நடிகர்கள்:

சரவணன் அருள் நாயகனாக நடிக்கும் படத்திற்கு தி லெஜன்ட் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஹரிஸ் ஜெயராஜ் இசை பாடல்:

இந்த படத்தின் படபிடிப்பு முடிந்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. சமீபத்தில் ஹரிஸ் ஜெயராஜ் இசையில் மோசலோ மோசலு, வாடிவாசல் பாடல் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து இருக்கிறது. இதில் கலந்துகொண்ட சரவணா ஸ்டோர் அருள் கூறி இருந்தது, மீடியா நண்பர்களின் ஆதரவு எனக்கு எப்போதும் வேண்டும். இந்த படம் ஒரு வெற்றி படமாக அமையும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

சரவணா அருள் கூறியது:

அதுமட்டுமில்லாமல் பேன் இந்திய படமாகவும் இந்த படம் உருவாகி இருக்கிறது. மிகப்பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. ஒரு நல்ல நம்பிக்கை ஊட்டும் கதையம்சம் கொண்டதாக இருக்கிறது. படம் எல்லோருக்கும் பிடிக்கும், வெற்றியடையும் என்று நம்புகிறேன். என்னுடைய ரோல் மாடல் ரஜினி சார், விஜய் சார் தான். என்னை கிண்டல் செய்பவர்கள் எல்லோருக்குமே நன்றி என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement