தி லெஜண்ட் படத்தின் வசூல் மற்றும் பட்ஜெட் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தி லெஜெண்ட் சரவணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் சரவணன் அருள். தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாத இடமே இல்லை. தனது சொந்தக் கடை விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். இவர் தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் தோன்றி நடித்தார்.
இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில் தானே ஒரு பட நிறுவனத்தை தொடங்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் அருள் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான படம் தி லெஜெண்ட். இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.
தி லெஜன்ட் படம்:
மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, விவேக், வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து இருக்கிறார்கள்.
தி லெஜன்ட் படம் விமர்சனம்:
அதிக எதிர்பார்ப்புடன் தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகி இருந்தது. தமிழில் தயாரான இந்த படம் தெலுங்கு, கன்னடம், இந்த ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பான் இந்திய படமாக மாறி இருக்கிறது. இந்த படத்தில் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் சரவணன் நடித்திருந்தார். சரவணனின் நண்பன் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். பின்னொருநாள் சரவணனின் நண்பர் சக்கரை வியாதியால் இறந்து விடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் இனி எந்த உயிருக்கும் சக்கரை வியாதி இருக்கக் கூடாது என முடிவு செய்து தீவிர முயற்சியில் இறங்குகிறார்.
படத்தின் கதை:
இந்த முயற்சியில் சரவணன் வெற்றி கண்டாரா? இல்லையா? வந்த தடைகளை தகர்த்தெரிந்து முன்னேறி சென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. இந்த படத்தின் மூலம் சரவணன் அருள் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல்ல ட்ரெண்டிங் ஆகி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் தி லெஜண்ட் படத்தின் வசூல் குறித்த விவரத்தை நடிகர் சரவணன் அருள் வெளியிட்டு இருக்கிறார். அதாவது, இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டை 45 கோடி ரூபாய்.
படத்தின் வசூல் விவரம்:
திரையரங்கில் கிடைத்த வசூல் மட்டும் 45 கோடி ரூபாய். சாட்டிலைட் உரிமையை 20 கோடி, ஓடிடி உரிமையை 25 கோடிக்கும் விற்பனை செய்ய தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக மொத்தம் இந்த படத்தின் மூலம் 45 கோடி லாபம் கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த படம் 100 கோடிக்கு மேல் அதிக செலவு செய்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 45 கோடி ரூபாய் என்று சரவணன் கூறியிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.