நடிகை கிளப்பிய பொய்யான வதந்தியால் மோகனை ஒதுக்கிய ஒட்டுமொத்த நடிகைகள் – விதி எப்படி எல்லாம் விளையாடி இருக்கு.

0
1815
- Advertisement -

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் இவர்களுக்கு செம்ம காம்படீசன் கொடுத்தவர் நடிகர் மோகன். 80களில் இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். எந்த ஊரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகை மோகன். இவர் 1982 ஆம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின் இவருடைய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். மேலும், வருடம் வருடம் சிறந்த நடிகர் விருதையும் இவர் தான் பெறுவார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகலும் சக்கை போடு போட்டு கொண்டு நடித்தார்.

-விளம்பரம்-
Image result for mike mohan

இவரை எல்லோரும் மைக் மோகன் என்று தான் அழைப்பார்கள். ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேய நேரத்தை செலவிட்டார். நடிகர் மோகன் கிட்டத்தட்ட 70 படங்களுக்குப் மேல் நடித்து தூள் கிளப்பியவர். நடிகர் மோகனின் படம் என்றாலே நிச்சயம் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு ஓடும் என்று எல்லோரும் பேசுவார்கள்.80ஸ் காலகட்டங்களில் வசூல் மன்னனாக திகழ்ந்தவர். தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையும் ஆவார். கமலஹாசனுக்கு அடுத்த படியாக காதல் மன்னனாக வலம் வந்தவர் நடிகர் மோகன்.

இதையும் பாருங்க : எவர் கிறீன் நடிகை நதியாவின் அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா ? அதுவும் அவங்க அம்மா Xerox

- Advertisement -

இப்படி எல்லாவிதத்திலும் சிறந்து விளங்கிய நடிகர் மோகன் அவர்கள் ஒரு நடிகை சொன்ன வதந்தியால் அப்படியே அவருடைய வாழ்க்கை பாதையை மாறிவிட்டது. மலையை புரட்டிப் போடும் அளவிற்கு நடிகர் மோகன் வாழ்கை மாறியது. அந்த நடிகை சொன்ன பொய்யான தகவலால் திரை உலகமே அதிர்ந்து போனது. சினிமா உலகில் திரை புகழின் உச்சத்தில் மோகன் இருந்த போது அவர் மீது நடிகை ஒருவர் காதல் வயப்பட்டார். அவரிடம் தன்னுடைய காதலையும் கூறினார் அந்த நடிகை. ஆனால், நடிகர் மோகன் அவர்கள் முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் கடும் கோபம் அடைந்த அந்த நடிகை, மோகனுக்கு எய்ட்ஸ் இருப்பதாக வதந்தியை பரப்பி விட்டார். நல்ல வேளை அந்த காலத்தில் சோசியல் மீடியா வளர்ச்சி எதுவும் பெரியதாக இல்லை. இருந்தாலும் பத்திரிகைகளில் வருவதே உண்மை என்று பலரும் நம்புவார்.

mohan-latest-photo-cinemapettai

அதனால் அந்த நடிகை சொன்ன மாதிரி நடிகர் மோகனுக்கு எய்ட்ஸ் உள்ளது என்று பத்திரிகையில் வந்து விட்டது. அன்றிலிருந்து மோகனை எந்த ஒரு நடிகையும் பக்கத்தில் கூட சேர்ப்பதில்லை. மோகன் படம் என்றால் அனைவரும் விலக துவங்கினர். அதோடு இயக்குனர்களும் தயாரிப்பாளரும் கூட இவரைக் கண்டு பயப்பட தொடங்கினார்கள். பக்கத்து வீட்டுக்காரர் கூட மோகனைக் கண்டு பயந்து வீட்டிற்குள் கூட விட மாட்டார். இதனால் நடிகர் மோகன் விரக்தியில் என்ன செய்வதென்று தெரியாமல் தன்னுடைய வீட்டை விற்றுவிட்டு சென்று விட்டாராம். ஆனால், தற்போது அவருக்கு 61 வயது ஆகிறது. இன்னும் நன்றாகத்தான் ஆரோக்கியமாக உள்ளார் மைக் மோகன். இவரைக் குறித்து அப்போது பத்திரிக்கையில் வந்த எல்லா தகவலுமே வதந்தி பொய் என்று நிரூபித்து விட்டார்.

-விளம்பரம்-
Advertisement