தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள் என தெரிய வந்து உள்ளது.
https://twitter.com/SivaDhivya94/status/1232350749578784769
தற்போது வரை வலிமை படத்தின் கதாநாயகி குறித்து எந்த தகவலும் வரவில்லை. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றார் இயக்குனர். சமீப காலமாகவே தல அஜித் அவர்கள் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார். இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டு இல்லாமல் இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் பைக் காட்சி ஒன்றில் அஜித் பைக் ஓட்டிய போது எதிர்பாராதவிதமாக அவர் பைக்கில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு ஒரு சில சிறுகாயங்கள் ஏற்பட்டு மீண்டும் சூட்டிங்கிற்கு திரும்பி அந்த காட்சிகளில் நடித்து முடித்துள்ளார். இது அனைவருக்கும் தெரிந்தே. சமீபத்தில் கூட வலிமை படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் பேட்டியில் சில தகவல்களை கூறியிருந்தார். மேலும், இந்த படத்தில் உமா குரேஷி, நவதீப் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருவதாக சில தகவல்கள் வெளிவந்து உள்ளது.
https://twitter.com/ThalaAjith_FC/status/1232311877855670274
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தேன்மொழி தொடரில் நடித்து வரும் நடிகை ஸ்டேபி நடிக்கிறார் என்ற தகவல் அவரே சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவரே பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அதில் அவர் கூறியது, நான் தல அஜித் அவர்களின் தீவிர ரசிகை. அவருடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. மேலும், வலிமை படத்தில் தற்போது நான் நடிக்கப் போகிறேன். இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் நான் தல அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளேன் என்று வெளிப்படையாகக் கூறினார்.





