கெத்தாக கோட் சூட்டில் போட்டோ ஷூட். வேற லேவெலில் மாறிய வில்லன் நடிகை சாய் தீனா.

0
2894
saidheena
- Advertisement -

பொதுவாக சினிமாவில் ஒரு சில வில்லன் நடிகர்கள் மட்டுமே ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப் படுவது இல்லை. இருப்பினும் ஒரு சில வில்லன் நடிகர்கள் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் வில்லன் நடிகரான தீனா தனது வில்லத்தனமான நடிப்பால் பல ரசிகர்களை கொண்டுள்ளார். கமல் நடித்த விருமாண்டி படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தீனா.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CDBoE73j-Hy/?igshid=18qt0uhbqnzr4

முதல் படமே கமல் படம் என்பதால் இவர் நடித்த பெரும்பாலான படங்களில் இவரது வில்லத்தனத்தையும் தாண்டி இவரது நடிப்பும் வெகுவாக பாராட்டபட்டது. விருமாண்டி படத்திற்கு பின்னர் தமிழில் வெளியான பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இதுவரை ஜில் ஜங் ஜக், தெறி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் தீனா. மேலும், தனுஷ் நடிப்பில் வெளியான ‘வட சென்னை’ படத்திலும் ஒரு முக்கிய வில்லனாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது.

- Advertisement -

நடிப்பையும் தாண்டி இவரது பேச்சுக்கு பல ரசிகர்களும் இருக்கிறார்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் இவர் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தார். இந்த நிலையில் இவர் படு மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். மேலும், சமீபத்தில் தான் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சேர்ந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CDBq9sIDXD7/

இறுதியாக விஜயின் பிகில் படத்தில் நடித்த சாய் தீனா தற்போது மாஸ்டர் படத்தில் விஜய் உடன் நடித்து வருகிறார் அதுபோக அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் பல்லு படாம பார்த்துக்கோ என்ற படத்திலும் நடித்திருக்கிறார் சாய் தீனா. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியான நிலையில் இந்த படம் மார்ச் மாதமே வெளியாவதாக இருந்தது. ஆனால் ஒரு பிரச்சினை காரணமாக இந்த படம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement