இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆகவும், 414 பேர் பலியாகியும் உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், கொரோனா பரவுதல் குறைந்தபாடு இல்லை என்பதால் இன்னும் இந்த உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். இதனால் போக்குவரத்துகள், கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவினால் மக்களின் இயல்பு வாழ்கை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.தற்போது நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு பிரச்சனை தலை தூக்கி ஆடுகிறது. இதற்காக சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஸ்டண்ட் நடிகர் தீனா அவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பம் முதலே தன்னலம் பார்க்காமல் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.இந்நிலையில் நடிகர் தீனா அவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை குறித்து உருக்கமான பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, அடித்தட்டு மக்களிடம் பொதுவாகவே உதவி செய்கிற பண்பு இருக்கும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இயல்பாகவே உதவும் மனப்பாண்மை இருக்கும்.

Advertisement

நான் மட்டும் பண்ணவில்லை. என்னை போல் நிறைய பேர் உதவிகளை செய்து வருகிறார்கள். நான் நடிகன் என்பதனால் தெரிகிறது. என்னை விட நிறைய பேர் எவ்வளவோ பண்ணுகிறார்கள்.எனக்கு யார் என்றே தெரியாத ஒரு நபர் எனக்கு போன் செய்து மக்களுக்கு உதவுங்கள் என்று என்னிடம் நன்கொடை அளித்து இருந்தார். அவருடைய பெயரை அவர் கூற மறுத்துவிட்டார். இருப்பினும் அவருடைய பெயரை நான் என்னுடைய போனில் இறைவன் என்று பதிவு செய்து வைத்துள்ளேன். செய்யும் உதவியை யாருக்கும் தெரியக் கூடாது என்று நினைக்கும் ஒவ்வொருவரும் கடவுள் தான்.

நான் அதை சரியான இடத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரு டிரைவர் போல தான் இருக்கிறேன் ஆனால் இதனை சிலர் விளம்பரத்திற்காக செய்பவர்கள் தான் மிகப்பெரிய முட்டாள் அவங்க காலில் விழுந்து கும்பிடலாம் போல இருக்கும். அந்த அளவிற்கு இறங்கி போய் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். நாங்க ஊரடங்கு உத்தரவு தொடங்கப்பட்ட நாளில் இருந்தே மக்களுக்கு அரிசி,சாப்பாடு எல்லாம் கொடுத்துக் கொண்டு வருகிறோம்.

Advertisement

நோயை விட கொடுமையானது பசி தான். நோய் வந்தால் கூட பத்து நாள் கழித்து சிகிச்சை பெற்று குணம் ஆகி விடுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கும். ஆனால், பசி வந்தால் நான்கு நாளுக்கு பிறகு உயிரோடு இருப்பார்களா என்று சொல்ல முடியாது. எல்லா நோயை விட மிகக் கொடுமையான நோய் என்றால் அது பசி மட்டும் தான். வீட்டில் இருக்கிற குழந்தைகள் பசிக்குது சோறு கொடுங்கள் என்று அப்பா அம்மா கிட்ட கேட்கிறது எவ்வளவு பெரிய கொடுமை. அதனை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். அதிகமாகவே நான் அனுபவித்து இருக்கிறேன்.

Advertisement

அதனால் தான் சொல்கிறேன் பசி தான் ரொம்ப கொடுமை. இப்போது நிறைய இடத்தில் உணவு செய்து கொடுக்கிறார்கள் அரசாங்கமும் நிறைய பண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் பன்னால் நன்றாக இருக்கும். ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்துட்டு இருபது நாள் வைத்து சமாளிப்பியா என்று கேட்டால் உன்னால முடியுமா?? ரெண்டு நாள் சாப்பாடுக்கே பத்தாது. அவங்க எப்படி ஒரு குடும்பத்தை நடத்துவார்கள்.

இதெல்லாம் கொஞ்சம் யோசிக்கணும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் அரிசி, காசு என்று சொல்வதை விட ஒவ்வொரு ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி,காசு கொடுத்து இருந்தால் நன்றாக இருக்கும். அரசை குறை சொல்ல முடியாது. பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் முன்வந்து பண்ணினால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

Advertisement