திருமணத்திற்கு பிறகு பாடகர் அறிவு செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராப் பாடகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தெருக்குரல் அறிவு. இவர் பாடகர் மட்டும் இல்லாமல் பாடல் ஆசிரியரும் ஆவார். இவர் பா. ரஞ்சித் கூட்டத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த காலா படத்தில் உரிமையை மீட்போம் என்ற பாடலை எழுதி இருந்தார். இதன் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகி இருந்தார்.

அதன் பின் இவர் விஜயின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெயிடு மாஸ்டர் பாடலை எழுதி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் தனுஷ், ஜீவா உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் படங்களிலும் பாடகராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இன்னொரு பக்கம் இவர் நிறைய ஆல்பம் பாடல்களை எழுதி இருக்கிறார். அந்த வகையில் இவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணணின் மகளும் பிரபல பாடகியுமான தீ உடன் சேர்ந்து என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடி இருந்தார்.
தெருக்குரல் அறிவு காதல் :
இந்த பாடல் 2021 ஆம் ஆண்டு யூடியூபில் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போதும் இவர் படங்களில் பிஸியாக பயணித்து தான் வருகிறார்.இதனிடையே இவர் கல்பனா அம்பேத்கர் என்பவரை காதலிப்பதாக 2022 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார். கல்பனா அம்பேத்கர் அவர்கள் வருடம் வருடம் மார்கழியில் நடந்து வரும் ‘மார்கழியில் மக்கள் இசை’ என்ற கலைத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
'சின்ன வயதில் இருந்து ஏக்கம்'.. இளையராஜா முன்னிலையில் சாதி மதமற்ற திருமணம் செய்துகொண்ட பாடகர் அறிவு!#TherukuralArivu #SingerArivu #ArivuMarriage #Ilaiyaraaja #PaRanjith #NewsTamil24x7 pic.twitter.com/hgsirYpgbR
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) January 12, 2025
தெருக்குரல் அறிவு திருமணம்:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தெருக்குரல் அறிவு – கல்பனா அம்பேத்கர் இருவருக்குமே திருமணம் நடந்திருக்கிறது. இவர்களுடைய திருமணம் சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள இளையராஜா சென்னை இளையராஜா தலைமையில் நடந்து இருக்கிறது. திருமணம் முடிந்த கையோடு இவர் அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு செய்தியாளர்களளை சந்தித்த அறிவு தனது திருமணம் குறித்து சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதில், சுயமரியாதை திருமணம், ஜாதி மதமற்ற சுயமரியாதை திருமணம். சின்ன வயசுல இருந்து எனக்கு ஒரு ஏக்கம் இருந்துட்டே இருக்கும்.
தெருக்குரல் அறிவு பேசியது:
ஜாதி எல்லாத்தையும் தாண்டி எப்போ சுதந்திர காற்றை சுவாசிப்போம் என்கிற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். அந்த மாதிரி ஒரு சுயமான முடிவாக இந்த திருமணத்தை நான் பார்க்கிறேன். சுயமரியாதை திருமணம்தான் செய்ய வேண்டும். பெரியார் இயற்றிய சட்டத்தின் வழியாக, அம்பேத்கர் பெற்றுத் தந்த உரிமைகள் மூலமாக கல்வி பெற்று, அடையாளம் பெற்று இன்று சுயமரியாதை மனிதர்களாக மாறி இருக்கிற நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காக அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு வந்தேன். எனக்கு இசைஞானி இளையராஜா அவர்கள் திருமணம் செய்து வைத்தார்.

நன்றி தெரிவித்த அறிவு :
உண்மையிலேயே, இசையின் இறைவன், அவரின் கைகளால் திருமணம் செய்து கொண்டது, இந்த பாகுபாடு எல்லாத்தையும் தாண்டி, இசையாகத்தான் இணைய வேண்டும் என்பது எனக்கு தேடலாக இருந்தது. அந்த தேடல் தற்போது திருமணமாக நடந்தேறி இருக்கிறது. அதனால் இந்த திருமணத்திற்கு உதவிய எனது குடும்பத்தினர், நண்பர்கள் எல்லோருக்கும், எனக்கு திருமணம் செய்து வைத்த இசைஞானி ஐயா அவர்களுக்கும், நேரில் வந்து வாழ்த்திய இயக்குனர் பா ரஞ்சித் அவர்களுக்கும், திருமாவளவன் அவர்களுக்கும் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.






