நடிகையையும் அவரது தாயையும் படுக்கைக்கு அழைத்தது உண்மை தான். திமிராக ஒப்புக்கொண்டு திமிர் பட வில்லன்.

By Rajkumar · 10/11/2019

கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் #metooo மூமென்ட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பின்னணி பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது தொடுத்த பாலியல் புகாரை அடுத்து பல பிரபலங்கள் மீதும் அடுத்தடுத்து #metoo புகார் வெடித்து வருகிறது. அதிலும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பல்வேறு நடிகர்களை பற்றிய புகார்களை முன்வைத்தார். மேலும், இந்த #metoo புகாரில் நம்பமுடியாத பல சினிமா பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ள விநாயகம் மீது நடிகை ஒருவர் கடந்த ஜூன் மாதம் #metoo புகார் அளித்திருந்தார்.

இந்த சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் 25 வருடத்திற்கு மேலாக பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் விநாயகம். இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான 'திமிரு ' படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக, நடக்க முடியாதவராக நடித்திருந்தார். நடிகர் விநாயகம் மீது, கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் மாடல் அழகியுமான மிருதுளா தேவி என்பவர் , மீ டூ புகார் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் பாருங்க : நீ வெர்ஜினா? என்னை திருமணம் செய்து கொள்வியா. ரசிகரின் கேள்விக்கு நிவேதா தாமஸ் கொடுத்த பதிலை பாருங்க.

அதே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மிருதுளா தேவியை அழைத்த போது, ஆபாசமாகப் பேசியதாக விநாயகன் மீது புகார் கொடுத்தார். தன்னை மட்டுமல்லாது தன் தாயையும் அவர் விருப்பும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொன்னதாக, விநாயகன் மீது அவர் கல்பட்டா காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் நீதி மன்றத்திற்கு சென்றது. அதில் மாடல் அழகி மிருதுளா தேவிக்கும் அவரது தாயாருக்கும் பாலியல் தொல்லை அளித்தது உண்மைதான் என நடிகர் விநாயகன் ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மலையாள திரையுலகில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full