நீ வெர்ஜினா? என்னை திருமணம் செய்து கொள்வியா. ரசிகரின் கேள்விக்கு நிவேதா தாமஸ் கொடுத்த பதிலை பாருங்க.

0
158078
nivetha-thomas

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல்வேறு நடிகைகள் தற்போது கதாநாயகிகளாக கலக்கி கொண்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சிறுவர்கள் விரும்பிய தொடர் மைடியர் பூதம். இந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இருப்பவர் நிவேதா தாமஸ். அதன் பின்னர் விஜயின் குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார்.

ஜில்லா படத்தில் மீண்டும் விஜய்க்கு தங்கையாக நடித்தார். மேலும், உலக நாயகன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்ட பட்டது. அதன் பின்னர் ஜெய் நடிப்பில் வெளியான ‘நவீன சரஸ்வதி சபதம் ‘ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படம் சுமாரான வரவேற்ப்பை பெற்றிருந்தது. அந்த படத்திற்கு பின்னர் தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இருப்பினும் தெலுங்கில் ஒரு சில படங்கள் நடிக்க அங்கு அவருக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் தெலுங்கில் அனைத்து முன்னணி நாயகிகளுடன் நடித்துவிட்டார். பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜா நடிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்ற செய்திகள் கூட வெளியாகி இருந்தது. நிவேதா தாமஸுக்கு தற்போது தான் 22 வயது, ஆனால் ரவி தேஜாவுக்கு 50 வயது. இதனால் 50 வயது நடிகருடன் நிவேதா தாமஸ் டூயட் பாடி ரொமான்ஸ் செய்ய உள்ளார் என்று செய்திகள் பரவியது.

இதையும் பாருங்க : தளபதி படத்தின் முதல் ஷாட்டில் மயங்கி விழுந்த ஆயிரத்தில் ஒருவன் அழகம்பெருமாள்.

இப்படிபட்ட நிலையில் நடிகை நிவேதா தாமஸ் திடீரென்று சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ பாடத்தில் கமிட் ஆகிவிட்டார். இதனால் சும்மா இருப்பாரா அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் லைவ் சாட்டில் வந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்படி சமீபத்தில் இவர் லைவ் சாட்டில் வந்த போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு சிலர் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா, நீங்கள் இன்னும் வெர்ஜினா(கன்னித்தன்மையுடைவரா) என்று கேள்விகளை கேட்டுள்ளனர்.

-விளம்பரம்-

இதனால் கடுப்பான நிவேதா தாமஸ், இது போன்ற கேள்விகளுக்கு தனியாக பதில் அளித்துள்ளார். அதில் என்று குறிப்பிட்டுள்ளார். எனக்காக நேரம் ஒதுக்கி என்னுடன் சாட் செய்த அனைவருக்கும் நன்றி. நீங்கள் ஜாலியாக கேட்டிருந்த சில கேள்விகளுக்கு பதில் அளித்தது மிகவும் நன்றாக இருந்தது. அதே சமயத்தில் என்னிடம் எப்போதுமே கல்யாணம் ? உங்களுக்கு காதலர் இருக்கிறாரா? நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? நீங்கள்வெர்ஜினா போன்ற கேள்விகளை நான் நிராகரித்து விட்டேன். இது போல கேட்பதற்கு முன்பு நானும் ஒரு மனுசி தான் என்பதை மறந்து விடாதீர்கள். இது போன்ற கேள்விகளை கேட்கும் முன் கொஞ்சம் நாகரீகமாக நடந்த கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement