விஜய்யின் பீஸ்ட் வசூலை முந்திய தனுஷின் திருச்சிற்றம்பலம் – வெளியான தகவல் இதோ.

0
547
- Advertisement -

விஜய்யின் படத்தை விட தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் வசூலை வாரி குவித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது தனுஷ் அவர்கள் நானே நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
beast

கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

- Advertisement -

தனுஷ் நடிக்கும் படங்கள்:

அதோடு மாதேஸ்வரன்- தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் நடித்த தி கிரே மேன் என்ற படம் வெளியாகி இருந்தது. அவெஞ்சர் பட இயக்குனர்கள் இயக்கிய படம் தான் தி கிரே மேன். பிரம்மாண்ட பொருட் செலவில் வெளியாகி இருந்த இந்த படத்தில் நடிகர் தனுஷ் அவிக்சான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

திருச்சிற்றம்பலம் படம்:

இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் திருச்சிற்றம்பலம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர். நீண்ட நாள் ரசிகர்கள் எதிர்பார்த்த இந்த படம் சமீபத்தில் தான் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின் திருச்சிற்றம்பலம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது. இதனை ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சமீபத்தில் விஜய்யின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்திருந்த படம் பீஸ்ட்.

திருச்சிற்றம்பலம் படம் வசூல்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் நல்ல சாதனை பெற்றிருந்தது. இந்த நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் விஜயின் பீஸ்ட் பட வசூலை முந்தி அடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து கோலிவுட்டில் தனுஷ் பிக் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட்களை பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement