லியோ படத்தால் லாபமே இல்லை என்று திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த விஜய்யின் லியோ படம் சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. குறிப்பாக, படத்தில் விஜய் அன்பான தந்தையாகவும், வில்லன்களை வெறித்தனமாக வேட்டையாடும் மான்ஸ்டர் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

Advertisement

லியோ படம்:

மேலும், உலக அளவில் முதல் நாளில் இந்த படம் 148 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
இனி வரும் நாட்களில் லியோ படம் மிக பெரிய அளவில் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, லியோ படம் உருவானபோதிலிருந்தே பல சர்ச்சைகளை சிக்கி இருக்கிறது. படத்தின் கதை காப்பி, பாடல் சர்ச்சை, இசை வெளியீட்டு விழா, சம்பளம் விவகாரம் என பல பிரச்சனைகள் எழுந்து இருந்தது. அதிலும், குறிப்பாக ரிலீசுக்கு முன் பல பிரச்சினைகளை இந்த படம் சந்தித்திருந்தது.

லியோ படம் குறித்த சர்ச்சை:

அதில் ஷேர் பிரச்சனை தான் பரவலாக பேசப்பட்டது. லியோ படத்தை தமிழ்நாட்டில் முழுவதும் 7 ஸ்கிரின் நிறுவனம் தான் விநியோகம் செய்து இருந்தது. அப்போது இதுவரை இல்லாத அளவிற்கு 80 சதவீதம் ஷேர் தொகை லியோ படத்துக்கு கேட்டதால் திரையரங்க உரிமையாளர்கள் பலருமே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனாலே படத்தின் ரிலீசுக்கு முன் நாள் வரை சென்னையில் பல திரையரங்களில் முன்பதிவு நடக்காமல், படத்தை வாங்காமல் இழுத்து அடித்து இருந்தனர்.

Advertisement

திருப்பூர் சுப்ரமணியன் பேட்டி :

பின் ஒரு வழியாக பேச்சுவார்த்தை முடிந்து லியோ படம் வெளியாகியிருந்தது. தமிழகம் முழுவதும் 850 க்கும் மேற்பட்ட திரையரங்கில் தான் லியோ படம் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் லியோ படத்தால் பாதிக்கப்பட்டேன் என்று திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், லியோ லாபகரமான படமாக எங்களுக்கு அமையவில்லை. காரணம், இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவு ஷேர் பங்கீடு வாங்கி இருக்கிறார்கள். பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் இந்த படத்தை விரும்பி போடவில்லை.

Advertisement

லியோ ஷேர் குறித்த சர்ச்சை:

அந்த அளவு அதிகமான ஷேர் கேட்டு எல்லா தியேட்டர்களையும் கசக்கி பிழிந்து விட்டார்கள். படம் வசூல் அதிகமாக இருந்தாலும் அதில் எங்களுக்கு பிரயோஜனமே இல்லை. எங்களுக்கு நஷ்டம் இல்லை. அவர்கள் இவ்வளவு தொகை ஷேர் கேட்டால் மீதி தொகை எங்களுடைய திரையரங்கு பராமரிப்புக்கே பத்தாது. இதே படத்தை பக்கத்து மாநில கேரளாவில் 60% வெளியிட்டு இருக்கிறார்கள். எங்களிடம் 80 சதவீதம் வாங்கி இருக்கிறார்கள். இது என்ன நியாயம்? இந்த படத்துடன் இன்னொரு படம் மட்டும் வந்திருந்தால் இப்போது கிடைத்துள்ள தியேட்டரில் பாதி கூட லியோவுக்கு கிடைத்திருக்காது. வேறு படம் இல்லாததால் தான் இதை திரையிட வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் திரையிட்டோம் என்று மனவேதனையில் கூறியிருக்கிறார்.

Advertisement