திருட்டு பயலே நாயகனா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன ஜீவன்- வைரலாகும் வீடியோ

0
1008
- Advertisement -

நான் அவன் இல்லை என்ற டயலாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஜீவன். இவருடைய இயற்பெயர் விஜயபாஸ்கர் ரெங்கராஜ். இவர் தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘யூனிவர்சிட்டி’ படத்தின் மூலம் தான் அறிமுகமானவர். அதன் பின்னர் சூர்யா நடிப்பில் வெளி வந்து சூப்பர் ஹிட் கொடுத்து இருந்த ‘காக்க காக்க’ படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார் ஜீவன். இந்த படம் இவரது திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அந்த படம் மூலம் ஜீவனுக்கு பெயர் கிடைத்தது.

-விளம்பரம்-

அந்த படத்தை தொடர்ந்து இவர் திருட்டு பயலே, நான் அவன் இல்லை போன்ற படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இப்படி தொடர்ந்து நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜீவன் அதன் பின்னர் ஹீரோவாக மச்சக்காரன் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் தோல்விப்படமாக தான் அமைந்தது. அதற்கு பிறகு அவருக்கு சினிமாவில் சரியாக பட வாய்ப்புகள் அமையவில்லை.

- Advertisement -

ஜீவன் நடித்த படங்கள்:

பின் இறுதியாக தமிழில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த அதிபர் என்ற படத்தில் ஜீவன் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் ஆளே காணோம். இந்த நிலையில் 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க ஜீவன் படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பாக இந்த படம் உருவாக இருக்கிறது. 6.2, ஓரம்போ, வாத்தியார் ஆகிய படங்களை இந்த தயரிப்பு நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படத்தினை வி.சி வடிவுடையான் இயக்க இருக்கிறார்.

சன்னி லியோன் நடிக்கும் படம்:

வி.சி வடிவுடையான் தற்போது சன்னி லியோனை வைத்து வீரமாதேவி படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாக இருக்கிறது. மேலும், ஐந்து மொழிகளிலும் இருந்து முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். முண்ணனி கிராபிக்ஸ் நிறுவனமொன்று இந்த படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்க இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

-விளம்பரம்-

மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஜீவன்:

இது ஒரு புறம் இருக்க ஜீவன் அசரீரி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். புதுமுக இயக்குனர் ஜிகே இயக்குகிறார். நீரவ்ஷா உதவியாளர் மருதநாயகம் ஒளிப்பதிவு இயக்குகிறார். மேலும், இந்த படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. அறிவியல் எவ்வாறு ஒரு குடும்பத்திற்குள் ஒரு உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக உள்ளது. இந்நிலையில் நடிகர் ஜீவன் உடைய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

வைரலாகும் ஜீவன் வீடியோ:

இதை பார்த்து பலரும் அதிர்ந்து போய் விட்டார்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஜீவன் மாறி இருக்கிறார். நடிகர் ஜீவன் அவர்கள் சமீபத்தில் நடந்த ரஜினி என்ற படத்தின் ஆடியோ லான்ச்க்கு சென்று இருந்தார். அந்த விழாவில் நடிகர் ஜீவன் கலந்து கொண்டு பேசி இருக்கிறார். அந்த அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் திருட்டுப்பயலே படத்தில் நடித்த ஜீவனா இது! அடையாளம் தெரியாமல் ஆளே மாறிப் போய் இருக்கிறார் என்று எல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement