கடும்கோபத்தில் “தல” காரணம் இதுதான்…

0
2101
Ajith
- Advertisement -

தனக்கென்று ஒரு வட்டம் போட்டு அதற்குள் வாழ்ந்துவரும் தல தனக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமல் இருந்துள்ளார் இவ்வளவு நாட்களாக.
இப்போது அதுவே அவரது கடும்கோபத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.
Ajith
“அஜீத் சார் உங்ககிட்ட சொல்ல சொன்னார்.
அஜீத் சார் அது கேட்டார். அஜீத் சாருக்கு இது பிடிக்காது. அஜீத் சார் இத விரும்பல”. இப்படி சொல்லி சொல்லியே இன்டஸ்ட்ரியில் ஆட்டம் போட்டு கொண்டிருந்த அவரது பணியாளர்களில் சிலர் தற்போது தலயின் பார்வைக்குள் வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஏனென்றால் நடந்த நிகழ்வு அப்படியானது.

-விளம்பரம்-

‘விவேகம்’ படத்தில் பணியாற்றிய அஜீத்தின் பர்சனல் மேக்கப்மேன், “அஜீத் சார் உங்ககிட்ட சொல்லச் சொன்னார்” என்று தினந்தோறும் வாங்கிய சம்பளம் 70 ஆயிரம். அஜீத் சாரே சொல்லிவிட்ட பின், பேரம் பேசினால் அது அவருடனான நல் உறவுக்கு இழுக்கை ஏற்படுத்திக் கொடுத்துவிடுமே என்று தினந்தோறும் 70 ஆயிரத்தை அழுது வந்திருக்கிறது சத்யஜோதி நிறுவனம். (விஜய்யின் மேக்கப் மேன் பேக்கேஜாக 30 ஆயிரம் வாங்குவதாக கூறுகிறது இன்டஸ்ட்ரி)
Ajith
கொஞ்சம் லேட்டாக தான் தலயின் காதுக்கு விஷயம் வந்துள்ளது. உடனே தன்னுடைய மேக்கப்மேனை அழைத்து தீர விசாரித்து, நடந்தது உண்மைதான் என்று தெரிந்த அடுத்தநொடியே வேலையை விட்டு தூக்கிவிட்டாராம்.
மேக்கப் மேனுக்கு ஏற்கனவே தனது சொந்த செலவில் ஒரு வீடும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் அஜீத்.

- Advertisement -

இதையும் படிங்க: அஜீத்தை ஏமாற்றியது யார் !!! அவருக்கு ஏற்பட்ட கதி என்ன தற்போது!

தல இனிவரும் காலங்களில் தன்னுடன் பணியாற்றும் ஊழியர்கள் நான் சொல்வதாக எதை கூறினாலும் என்னிடம் ஒருமுறை கேட்டு செய்யுங்கள் என்று கறாராக சொல்லிட்டாராம்.

-விளம்பரம்-

“தல” தல தான்…

Advertisement