துணிவு நாயகி மஞ்சு வாரியருக்கு இவ்வளவு பெரிய மகளா? – பார்க்க ஒரே மாதிரி இருக்காங்களே.

0
870
- Advertisement -

கோலிவுட் ஸ்டாரான பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி தளபதி விஜய் நடித்துள்ளார் வாரிசு திரைப்படத்துடன் வெளியானது. இப்படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார். மேலும் ரெட் ஜென்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார். மேலும் முன்னணி கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மஞ்சு வாரியார்:

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து இருந்த ‘அசுரன் ‘ படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மஞ்சு வாரியார். இந்த படம் அமோக வெற்றி பெற்று இருந்தது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் பரிட்சியமான நடிகை இல்லை என்றாலும், மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

- Advertisement -

லேடி சூப்பர் ஸ்டார் :

அதுமட்டும் இல்லாமல் இவரை மலையாள திரை உலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். இதனை தொடர்ந்து தமிழில் மஞ்சு வாரியருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆரம்பத்தில் நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் விளம்பரப் படங்களில் தான் நடித்து இருந்தார். அதற்கு பிறகு மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘சாக்ஷியம்’ என்ற படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார்.

திலீப் – மஞ்சு வாரியர்:

மேலும், பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலிப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தார்கள். பின் இருவரும் 1998 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து இருந்தார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற ஒரு மகள் இருக்கிறார்.

-விளம்பரம்-

மஞ்சு வாரியார் மகள் :

இந்த நிலையில் தான் மஞ்சு வாரியரின் மகள் லட்சிமியும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் “துணிவு” படத்தில் நடித்த மஞ்சு வாரியருக்கு இவ்வளவு பெரிய அழகான மகளா என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் மஞ்சு வாரியார் அஜித்துடன் நடித்துள்ள “துணிவு” படத்தில் நவீன துப்பாக்கிகளை கையாளும் சிங்கப்பெண்ணாக வந்து கலக்கியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement