வெளியானது ‘Gangstaa’ பாடல் – தீ தளபதி பாடலுக்கு பதிலடியா ? இந்த வரிய நோட் பண்ணுங்க.

0
629
varisuthunivu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும்.

-விளம்பரம்-

தமிழகத்தில் “தல, தளபதி” என்று சொன்னாலே போதும் வெறித்தனம் தான். அந்த அளவிற்கு தமிழகத்தில் ‘தல, தளபதிக்கு’ ரசிகர்கள் அதிகம்.உண்மையிலேயே அஜித்தும் விஜயும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. ஆரம்ப காலத்தில் விஜய் மற்றும் அஜித் இருவரும் தங்களது படங்களில் மாறி மாறி வசனங்களை பேசி இருக்கின்றனர்.

- Advertisement -

அவை எல்லாம் இயக்குனர்கள் எழுதிய வசனம் தான் என்றாலும் விஜய்-அஜித் ரசிகர்கள் அதை ஒரு வசன யுத்தமாக தான் பார்த்தனர். ஆனாலும், இந்த ரசிகர்கள் சன்டை இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அஜித்தை விஜய் ரசிகர்கள் திட்டுவதும் விஜய்யை அஜித் ரசிகர்கள் திட்டுவதும் வாடிக்கையாக தான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இன்று துணிவு படத்தின் முன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது.

அதில் இடம்பெற்று இருக்கும் சில வரிகள் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளது போலவே தெரிகிறது. அதில் குறிப்பாக வாரிசு படத்தின் தீ தளபதி பாடலில் இடம்பெற்ற ‘இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமா’ என்ற வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பாடலில் ‘வா பதிலடிதான் தெரியுமடா, உனக்கு சம்பவம் இருக்கு ‘ என்ற வரிகள் அமைந்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் பேசிய விஜய. எனக்கு 1992ஆம் ஆண்டிலிருந்து ஒரு போட்டியாளர் இருக்கிறார்.

-விளம்பரம்-

அவர் வெற்றியாளராக இருந்ததினால்தான் நான் அவருடன் போட்டி போட்டு கொண்டிருக்கிறேன் அவர் பெயர் ஜோசப் விஜய் என்று கூறிய தளபதி. Compete with Yourself, Be your own competition! என்று ரசிகர்களை ஊக்கு விக்கும் வகையில் வாரிசு ஆடியோ வெளியிட்டு விழாவில் தளபதி விஜய் பேசியிருந்தார். விஜய் இப்படி பேசி இருப்பதை பகிரும் விஜய் ரசிகர்கள் அஜித் எல்லாம் விஜய்க்கு போட்டியே கிடையாது என்று Memesகளை போட்டு கேலி செய்து வருகின்றனர்.

அதே போல இந்த இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் சில பேனர்களை எடுத்து வந்தனர். அந்த ஒரு பேனரில் ‘Studioல இருந்து ரிலீஸ் பண்ண இது என்ன ஆமை பாட்டா , Stadium போட்டு கொண்டாடுவோம் டா எங்க அண்ணன் பாட்ட’ என்று அஜித்தை மோசமாக விமர்சித்து இருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜித் ரசிகர்கள் விஜய்யை விமர்சித்து பேனர் அடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement