உங்களுக்காவது மஞ்சு வாரியர் குரல் கேட்டுச்சா – துணிவு பாடலால் மஞ்சு வாரியரை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
430
manju
- Advertisement -

அஜித்தின் துணிவு படத்தின் இரண்டாவது சிங்கள் பாடலை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். மேலும், அஜித்தின் வலிமை படம் வசூலில் வாரி இறைத்து இருந்தது என்று படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர்.

- Advertisement -

துணிவு படம் :

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கியது. இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோடில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-

படத்தின் கதை :

இந்த கதை பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இயக்குனர் வினோத் இயக்கி இருக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதன் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கிறார். அதேபோல் விஜய் நடித்த வாரிசு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதால் இரு படங்களுக்கு மத்தியில் மோதல்கள் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

படத்தின் முதல் பாடல்:

இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே துணிவு’ படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ பாடல் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகி இருந்தது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை அனிரூத் பாடி இருக்கிறார். இந்த பாடலை வைசாக் எழுதி இருக்கிறார். இந்த பாடல் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

இந்த நிலையில் துணிவு படத்தின் இரண்டாவது சிங்கள் பாடலை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது துணிவு படத்தின் இரண்டாவது சிங்களான காசேதான் கடவுளடா பாடல் இன்று வெளியாகி இருக்கிறது. சில்லா சில்லா பாடலை எழுதியவர் தான் இந்த பாடலையும் எழுதி இருக்கிறார். ஆனால், இந்த இரண்டாவது பாடல் நன்றாக இல்லை என்று பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

கேலிக்கு உள்ளான மஞ்சு வாரியர் :

அதுவும் குறிப்பாக தல தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று கூறியும் பாடலில் தல்லால்லா தல்லால்லா என்று அஜித்தை தல என்று மறைமுகமாக பாடி இருப்பதாகவும் தல்லால்லா தல்லால்லா, நல்லால்ல நல்லால்ல என்றும் கேலி செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த பாடலில் மாஞ்சு வாரியரும் பாடி இருந்தார். ஆனால், அவர் குரல் பாடலில் எந்த இடத்திலும் கேட்கவில்லை என்று memesகளை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Advertisement