இந்திய திரைப்பட உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் வித்யூத் ஜம்வால். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் வடிவழகனாகவும், தற்காப்பு கலைஞராகவும் உள்ளார். இவர் இந்தி, தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் முறையாக களரிப்பயிற்று என்ற கலையும் கற்றவர். 2011 ஆம் ஆண்டு வெளிவந்த போர்ஸ் என்ற இந்தி படத்தின் மூலம் தான் வித்யூத் ஜம்வால் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த துப்பாக்கி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தல அஜித்தின் பில்லா-2 படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். மேலும், அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பனாக நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : பை விளம்பரத்திற்கு உள்ளாடையில் போஸ் கொடுத்துள்ள சமந்தா. திருமணத்திற்கு பின்னும் இப்படியா ?

Advertisement

இந்நிலையில் நடிகர் வித்யூத் ஜம்வால் சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடை வடிவமைப்பாளர் நந்திதாவுக்கும் வித்யூத் ஜம்வாலுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், நடிகர் வித்யூத் ஜம்வால் தற்போது தன்னுடைய காதலியுடன் சேர்ந்து தாஜ்மஹாலுக்கு சென்றுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை நெட்டிசன்கள் வைரலாகி வருகிறார்கள். அந்த புகைப்படத்தில் நந்திதா கை விரலில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து இருக்கிறார். மேலும், நந்திதா ஏற்கனவே டெல்லியை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து பின்னர் அவரை பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement