‘இந்த சீன் லாம் தல Top notch ஸ்கிரீன் ப்ரசென்ஸ் டா டேய்’ – வேதாளம் பட சீனை காபி அடித்துள்ள இந்தி படத்தை வச்சி செய்யும் தமிழ் ரசிகர்கள்

0
284
vedhalam
- Advertisement -

அஜித்தின் வேதாளம் படக்காட்சியை பாலிவுட்டில் பிரபல நடிகர் படத்தில் வைத்திருப்பது குறித்து நெட்டிசன்கள் பலரும் கிண்டல் கேலி செய்து வரும் மீம்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் வேதாளம். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் அஜித்துடன் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் வேதாளம் படத்தில் வந்த காட்சியை பாலிவுட்

- Advertisement -

நடிகரின் படத்தில் ரிகிரேட் செய்திருக்கிற வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதுஎன்னவென்றால், பாலிவுட் நடிகர் Tiger Sheroff நடித்த படம் Heropanti 2. இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு நடிகர் Tiger Sheroff அவர்கள் பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் Heropanti 2.

இந்த படம் ஏப்ரல் 29ஆம் தேதி பாலிவுட்டில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் வந்த ஒரு காட்சி மட்டும் வேதாளம் படத்தில் வந்த காட்சியை காப்பியடித்து இருக்கின்றது என்று கூறப்படுகிறது. அதாவது, அஜித்தின் வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்து இருக்கும் லட்சுமிமேனன் ரவுடி கும்பலில் மாற்றி இருப்பார். அவரை காப்பாற்றுவதற்கு நல்லவனாக அஜித் நடிப்பார். அந்த காட்சி மிக பெரிய அளவில் ஹிட் அடித்தது.

-விளம்பரம்-

அதே காட்சியை தான் Heropanti 2 படத்தில் ஹீரோ நடித்திருப்பார். ஆனால், இரண்டிற்கும் ஒரே வித்தியாசம் அதில் தங்கை நடித்திருப்பார். Heropanti 2 படத்தில் அம்மா நடித்து இருக்கிறார். ஆனால், Heropanti 2 படத்தின் கதை களமும், கொண்டு சென்ற விதம் வேதாளம் படத்திற்கும் சம்பந்தமில்லை முற்றிலும் மாறுபட்ட கதை என்று கூறப்படுகிறது. தற்போது இந்த ஒரு காட்சி வீடியோவை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பயங்கரமாக கிண்டல் செய்து வருகிறார்கள்.

அதிலும் சிலர், இந்த சீன் எல்லாம் தல top-notchல் ஸ்கிரீன் பண்ணது. அஜித்தின் இந்த காட்சியை பார்க்கும் போது புல்லரித்து விட்டது. ஆனால், அந்த காட்சியை போயி இப்படி எல்லாமா பண்ணுவீங்க? ஒரு பர்சன்டேஜ் கூட அஜீத் உடன் இந்த காட்சி செட்டாகவில்லை என்றெல்லாம் பயங்கரமாக பாலிவுட் நடிகர் Tiger Sheroff நடிப்பை நெட்டிசன்கள் கிண்டலடித்து மீம்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement