என் முதல் கார வாங்கி அவன தான் முதல்ல ஏத்தி ரவுண்ட் அடிச்சேன் - ஜி பி முத்து சொன்ன உருக்கமான காரணம் (தங்கம் சார் இந்த மனுஷன்)

By Rajkumar · 7/6/2021

”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான். இவரது நெல்லைப் பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டதும் டிக் டாக் வாசிகள் பலரும் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று இடம் பெயர்ந்து விட்டனர். அந்த வகையில் ஜி பி மமுத்துவும் இன்ஸ்டாகிராமில் மற்றும் யூடுயூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவரது யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் தற்போது வைரல்.

https://twitter.com/chettyrajubhai/status/1401783532666560515

இவரது யூடுயூப் சேனலில் தனக்கு அனுப்பும் லெட்டர்களை படித்து காண்பித்து வருகிறார். அதில் கண்ட கண்ட பொருட்களை எல்லாம் பலர் அனுப்புகின்றனர். அது ஒரு புறம் வேடிக்கையாக இருந்தாலும் இவரது தமிழில் இவர் அதை படித்து அதற்கு இவர் கொடுக்கும் பதில்கள் தான் மிகவும் வேடிக்கையாக இருந்தது வருகிறது. இவரது வீடியோகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவும் கிடைத்து வருகிறது. இவரது யூடுயூப் சேனலை 3லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : என்ன சிம்ரன் இதெல்லாம், உங்க கிட்ட இருந்து இத எதிர் பாக்கல - பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கிளாமர் போஸால் ஷாக்கான ரசிகர்கள்.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜி பி முத்து Second hand கார் ஒன்றை வாங்கி இருந்தார். இதுகுறித்து பேசிய அவர் 'என் பரம்பரையிலேயே முதல் கார் இது தான் என்று கண்ணீருடன் தெரிவித்து இருந்தார். ஜி பி முத்து முதல் கார் வாங்கியதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர் .கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவர் தற்கொலைக்கு கூட முயன்றார். அதையெல்லாம் மீறி இவர் வளர்ந்து உள்ளது பாராட்டுக்குரிய விஷயம் தான் என்று பலரும் பாராட்டினர்.

https://www.youtube.com/watch?v=7cW30pi0PPw&t=303s

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜி பி முத்துவிடம், உங்கள் முதல் காரில் யாரை முதல் முதலாக ஏற்றி சென்றீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜி பி முத்து, என் நண்பனை தான். அவன் தான் எனக்கு பல உதவியை செஞ்சிச்சிருக்கான். கொரோனா காலத்தில் ஒரு 100 ரூபா இல்லாமல் இருந்த போது அவன் தான் எனக்கு கொடுத்தான். அவன் தான் என் பிள்ளைகள் படிப்புக்கு கூட பணம் கொடுத்தான் என்று எல்லாம் செய்தான். அதனால் எப்போதும் அவன் தான் எனக்கு முதல்.

behindtalkies AMP · Quick view
View full