என்ன சிம்ரன் இதெல்லாம், உங்க கிட்ட இருந்து இத எதிர் பாக்கல – பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கிளாமர் போஸால் ஷாக்கான ரசிகர்கள்.

0
6410
divyaganesh
- Advertisement -

சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கவர்ச்சி காட்ட தயங்குவது இல்லை. கவர்ச்சியான போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்த பல சீரியல் நடிகைகள் இருக்கிறார்கள். ஷிவானி, ரம்யா பாண்டியன் போன்ற பலர் போட்டோ ஷூட் மூலமே இளசுகள் மத்தியில் வைரலானார்கள். இப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்து வரும் ஜெனிபர் சமீபத்தில் பதிவிட்ட கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் கொஞ்சம் ஷாக்கடைந்து உள்ளனர்.

-விளம்பரம்-

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதையும் பாருங்க : கர்ப்பமாக இருக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் வீடியோவை பகிர்ந்த ஹரிஜா.

- Advertisement -

தமிழில் பல கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “ஸ்ரீமோய் ’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியல் தமிழில் மட்டுமல்ல கன்னட, மராத்தி, மலையாளம், தெலுகு மற்றும் ஹிந்தியிலும் ஒளிபரப்ப படுகிறது. இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் இவர் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் ‘என்ன சிம்ரன் இதெல்லாம்’ , ‘உங்க கிட்ட இருந்து இத எதிர் பார்க்கல’ என்று பல விதமான கமன்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement