தில்லு முல்லு படத்தில் நடித்த சிறுவன் மரணம் – நிறைவேறாமல் போன அவரின் கடைசி ஆசை.

0
1536
- Advertisement -

ரஜினிகாந்த் பட நடிகர் நிறைவேறாத ஆசையால் திடீரென்று இறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்ல என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது. அந்த வகையில் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று தான் தில்லு முல்லு.

-விளம்பரம்-

இந்த படத்தை மறைந்த இயக்குனர் கே பாலசந்தர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக இரண்டு கெட்டபில் தன்னுடைய நடிப்பை ரஜினி சிறப்பாக காண்பித்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் கமலஹாசன், சாருஹாசன் ஆகியோர் கெஸ்ட் ரோலில் எல்லாம் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

- Advertisement -

மாஸ்டர் சந்திரசேகரன் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் மாஸ்டர் சந்திரசேகரன். இந்த படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து ஏமாற்றுவதை கண்டுபிடித்து ரஜினிகாந்தை மிரட்டி பணம் பறிக்கும் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மாஸ்டர் சந்திரசேகரன். இந்த படத்திற்கு பிறகு இவர் வேறு சில படங்களிலும் நடித்திருந்தார். அதற்கு பின்பு வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவை விட்டு விலகி விட்டார்.

மாஸ்டர் சந்திரசேகரன் இறப்பு:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவருக்கு உடல்நிலை சரியாமல் போனது. இதனால் இவர் ஒரு மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் மாஸ்டர் சந்திரசேகரன் இறந்திருக்கிறார். தற்போது இவருக்கு 59 வயது தான் ஆகிறது. அது மட்டுமில்லாமல் இவருக்கு ஒரு ஆசையும் இருந்திருக்கிறது.

-விளம்பரம்-

கார்த்திக் பேட்டி:

அதாவது, நடிகர் ரஜினிகாந்தை ஒரே ஒரு முறையாவது நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். அதற்கான முயற்சியும் செய்திருக்கிறார். ஆனால், அது கைகூடவில்லை. நிறைவேறாத ஆசையிலேயே அவர் இறந்திருக்கிறார். மேலும், இது குறித்து அவருடைய மகன் கார்த்திக் பேட்டியில், அப்பாவுக்கு ரஜினி சாரை மீட் பண்ண வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. நாங்களும் அதற்காக முயற்சி எல்லாம் செய்து கொண்டு தான் இருந்தோம்.

இறுதி சடங்கு:

ஆனால், என்னுடைய அப்பாவிற்கு உடல்நிலை பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அட்மிட் செய்திருந்தோம். கடைசி வரைக்கும் அப்பாவுடைய ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது என்று மன வேதனையில் கூறியிருந்தார். மேலும், அவருடைய இறுதி சடங்குகள் சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெற இருக்கிறது.

Advertisement