போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மாஸ் காட்டி முன்னிலை வகிக்கும் கமல், பா ஜ க வேட்பாளர் வானதி பின்னடைவு.

By Rajkumar · 2/5/2021

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவிற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கண்டனர்.

https://twitter.com/DravidanCbe/status/1388705190933499906

கொரோனா பிரச்சனை காரணமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இன்று (மே 2) தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வருகிறது தி மு க. இப்படி ஒரு நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல் முதல் சுற்றில் முன்னிலை வகித்து வருகிறார்.

இதையும் பாருங்க : கண்ட மேனிக்கு தின்னதால் மருத்துவமனையில் அட்மிட் ஆனா விஜய் டிவி பிரியங்கா - அவரே சொன்ன காரணம்.

கோவை தெற்கில்திமுக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் சார்பில், மயூரா எஸ்.ஜெயக்குமாரும், அதிமுக இணைந்த பாஜக சார்பில் வானதி சீனிவாசனும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், அதன் தலைவர் கமல்ஹாசனும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்துல் வகாப்பும், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சேலஞ்சர் துரை என்ற ஆர்.துரைசாமி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இப்படி ஒரு நிலையில் இந்த தொகுதியில் கமல் முன்னிலை வகித்து வருகிறார்.

https://twitter.com/maiamofficial/status/1388702418326540292

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முதல் சுற்றில் 1391 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 1345 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும், இதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் 1,345 வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் 860 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full