கண்ட மேனிக்கு தின்னதால் மருத்துவமனையில் அட்மிட் ஆனா விஜய் டிவி பிரியங்கா – அவரே சொன்ன காரணம்.

0
70008
priyanka
- Advertisement -

விஜய் டிவியில் பல பெண்கள் தொகுப்பாளர்களாக இருந்து உள்ளார்கள். ஆனால், எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அந்த வகையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. ஒவ்வொரு தொகுப்பாளர்கள் தங்கள் ஸ்டைலில் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அந்த வகையில் தொகுப்பாளனி ப்ரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கம் ஸ்டைலுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அவரை வைத்து பல பேர் காமெடி செய்தாலும், கிண்டல், கேலி செய்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரேஞ்சில் மிகவும் ஜாலியாக எடுத்து கொண்டு போவார். இவர் 2013 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார்.

-விளம்பரம்-

ப்ரியங்கா அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாகியாக தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராகவும் பங்கு பெற்று வருகிறார். மேலும், இவரின் சிரிப்புக்கு என்றே ரசிகர்கர்கள் படை உள்ளது. தொகுப்பாளினியாக அறிமுகமான கொஞ்ச காலங்களிலேயே பிரியங்கா மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இதையும் பாருங்க : தல – தளபதி நடித்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள மெட்டி ஒலி சீரியல் நடிகை. அட, இவரா ? இதோ வீடியோ.

- Advertisement -

இவர் தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானர்.இவருடைய காமெடியான பேச்சு, கலகலப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என பலரையும் கவர்ந்தது. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். மேலும், இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர்.

பிரியங்கா ஒரு சாப்பாடு பிரியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் விஜய் டிவி ஷூட்டிங்கில் இருந்தால் கூட அவர் எதாவது சாப்பிட்டு கொண்டு தான் இருப்பார் என்று அவருடன் பணியாற்றிய பலர் கூறியுள்ளனர். அதே போல தான் ஒரு சாப்பாட்டு பிரியர் என்று பிரியங்காவே பல முறை கூறியுள்ளார். இப்படி ஒரு நிலையில் பிரியங்கா, தனது யூடுயூப் சேனலில் தனக்கு புட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement