தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம்கான இருக்கின்றனர். தேர்தல் நெருங்குவதால் அணைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருகிற சட்ட மன்ற தேர்தலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மையமும் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதில் நடிகர் கமல், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் 37 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான சரத்குமார் வெளியிட்டார்.

இதையும் பாருங்க : தளபதி 65 ல் இருந்த ஒரே பெண். உண்மையில் யார் இவங்க ? படத்துல இவங்களுக்கு என்ன ரோல் தெரியுமா ?

Advertisement

அதே போல இந்த தேர்தலில் தானும் தனது மனைவி ராதிகாவும் போட்டியிடவில்லை என்று அறிவித்த சரத்குமார், களத்தில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூட வைக்க தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. அதனால், நானும் என் மனைவியும், முதன்மைத் துணைப் பொதுச் செயலாளருமான ராதிகாவும் தேர்தலில் போட்டியிடவில்லைஎன்று கூறி இருந்தார்.

மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராதிகா பிரச்சாரம் மேற்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் அந்த புகைப்படத்தை சகுனி படத்தோடு ஒப்பிட்டு பல மீம்கள் வைரலாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணமே சகுனி படத்தில் நடிகர் கார்த்தி ‘கமல்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதே படத்தில் ‘ரமணி ஆச்சி’ கதாபாத்திரத்தில் நடித்த ராதிகா பின்னர் அந்த படத்தில் மேயராக மாறிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement