ஸ்டாலின் தான் வராரு, வெற்றி நடை போடும் தமிழகமே, ஸ்டாலின் தான் வராரு, வெற்றி நடை போடும் தமிழகமே என்ற இந்த இரண்டு பாடல்கள் தான் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதலே எந்த சேனலை திருப்பினாலும் நாம் கேட்கும் பாடலாக இருந்து வருகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே தேர்தல் தொடர்பான விளம்பரங்களை சென்னையை தலைமையிடமாகக் கொண்டு திமுகவும், அதிமுகவிற்கு சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டும் பல்வேறு குழுக்கள் இயங்கிவருகின்றன.

தேர்தலையொட்டி அரசியல் கட்சியனர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். அதே நேரத்தில் காலை, மாலை என வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. பரப்புரைக்காக ஒவ்வொரு கட்சியினரும் ஒரு உத்தியை உபயோகிக்கின்றனர். அதே போல பிரச்சாரம் ஒரு பக்கம் இருந்தாலும் விளம்பர பலகை, சுவரொட்டி, துண்டு பிரசுரங்கள் என்று பல கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியது.

இதையும் பாருங்க : கொரோனாவால் ஏற்பட்ட கஷ்டம் – வறுமையில் வாடி உயிரை விட்ட பில்லா பட நடிகர்.

Advertisement

அந்த வகையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் வெளியிட்ட துண்டு பிரசுரங்களில் ஒரே பெண்ணின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது வாக்களார்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுகவினர் கூறும் போது இந்த போஸ்டர் திமுக பொதுக்கூட்டத்திற்கானது என்றும், மார்ச் 7ஆம் தேதியே அச்சடிக்கப்பட்டு விட்டதாகதெரிவித்தனர். அதே போல அதிமுக கட்சியினரோ, இந்த பெண்ணை வைத்து ஜனவரி மாதமே விளாமரத்தை வெளியிட்டதாக அதிமுக சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ShtterStock என்ற இணையதளத்தில் வரும் தேடலில் (search) TamilWomen என்று தேடினால் இந்த பெண்னின் சில புகைப்படங்கள் வருகிறது. இதில் இருந்து தான் இந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்து இரண்டு கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி கொண்டதா என்பது தெரியவில்லை.

Advertisement
Advertisement