கொரோனாவால் ஏற்பட்ட கஷ்டம் – வறுமையில் வாடி உயிரை விட்ட பில்லா பட நடிகர்.

0
1863
theepetti
- Advertisement -

சினிமாவை பொறுத்து வரை அனைவருக்கும் வாழ்க்கை சரியாக அமைந்துவிடுவது இல்லை. குறிப்பாக எத்தனையோ துணை நடிகர்களின் நிலை பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கதைகளை நாம் பலவற்றை கேட்டுள்ளோம். அந்த வகையில் சமீபத்தில் தீப்பெட்டி கணேசனின் நிலையை கண்டு திரையுலக பிரபலங்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழ் சினிமா உலகிற்கு ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தீப்பெட்டி கணேசன். இவரது இயற்பெயர் கார்த்திக். தீப்பெட்டி கணேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் இவரை அனைவரும் தீப்பெட்டி கணேசன் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா செய்யும் பணியில் சேர்ந்தார். பின் இவர் உடலில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இவர் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட பிழைப்பிற்கு தவித்துவந்தார்

- Advertisement -

தீப்பெட்டி கணேசனுக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து வறுமையில் வாடி வரும் தீப்பெட்டி கணேசனுக்கு கொரோனா லாக்டவுனில் எந்த வித வருமானமும் இல்லாததால் ஒரு வேளை உணவிற்கு மொத்த குடும்பமும் தவித்துவந்தது . இந்த தகவலை அறிந்த நடிகர் விஷால் அவர்கள் ஒரு மாதத்திற்கான மளிகை சாமான் அனுப்பிவைத்து இருந்தார். அதற்க்கு நன்றி கூறி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல கடந்த சில மாதங்களாக இவர் உடல் நலக் குறைவு காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இப்படி ஓர் நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சீனு ராமசாமி, எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.அன்புநிறை இதய அஞ்சலி கணேசா என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement