தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம்கான இருக்கின்றனர். தமிழகத்தின் தற்போதைய முதல்வரும் அதிமுக கட்சியின் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், திமுகவின் கட்சி தலைவர் எம் கே ஸ்டாலின்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் போன்ற பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் கட்சியாக இருந்து வரும் பா ஜ கவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் பா.ஜனதா 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையும் பாருங்க : ‘தளபதி 65’ பூஜையில் கவின் இருக்கும் காரணம் என்ன தெரியுமா ? – உண்மை இது தான்.

Advertisement

வருகிற சட்ட மன்ற தேர்தலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மையமும் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதில் நடிகர் கமல், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் தான் பாஜக கட்சி சார்பாக வானதி ஸ்ரீநிவாசனுக்கு சீட்டு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் கமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் நடிகர் கமல் புதுச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தனது கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை வேனுக்குள் எறிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. புதுச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த கமல் பேசிக்கொண்டு இருக்கும் போது அவருடைய மைக் வேலை செய்யவில்லை. இதனால் வேனுக்குள் இருந்த நபரிடம் மைக் வேலை செய்யவில்லை என்று கூறிவிட்டு தனது கையில் இருந்த டார்ச் லைட்டை எறிந்தார்.

Advertisement
Advertisement