‘தளபதி 65’ பூஜையில் கவின் இருக்கும் காரணம் என்ன தெரியுமா ? – உண்மை இது தான்.

0
65332
kavin
- Advertisement -

விஜய் டிவியில் 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ என்ற தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தூள் கிளப்பினார். இதற்கு பிறகு அவர் சில படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது லிப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் கவின். இப்படி ஒரு நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி65’ படத்தில் கவின் நடிக்க உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் தனது 65 படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் நாயகி பற்றிய அப்டேட் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முகமூடி பட நடிகை பூஜா ஹேக்டே கமிட் ஆகி இருக்கிறார். இதை தவிர இந்த படத்தில் பணிபுரியம் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

- Advertisement -

இந்த படத்தின் பூஜை இன்று (மார்ச் 31) சென்னையில் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பூஜை புகைப்படம் ஒன்றில் நடிகர் கவினும் விஜய்க்கு அருகில் இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கவின் ‘தளபதி65’ படத்தில் நடிக்கிறார் என்று குஷியாகிவிட்டனர். அதே போல ட்விட்டரில் தளபதி65 ஹேஷ் டேக்கோடு கவின் ஹேஷ் டேக்கும் வைரலானது. ஆனால், உண்மையில் இந்த படத்தில் கவின் நடிக்கவில்லை. இந்த படத்தின் கதை டிஸ்கஷனில் மட்டும் தான் கவின் இருந்துள்ளாராம்.

இதே போலத்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெல்சன் இயக்கி வரும் ‘டாக்டர்’ படப்பிடிப்பில் நடிகர் கவின் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. இதனால்டாக்டர் படத்தில் கவின் நடிக்கிறார் என்று பலர் கூற ஆரம்பித்துவிட்டனர், இதுகுறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற நெல்சன் கூறும் போது, ‘கவின் இப்படத்தில் நடிகவில்லை ஆனால் இந்த படத்தில் வேலை செய்கிறார்’ என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement