செல்பி எடுக்கவே இல்லயாம். இத பாத்து தான் தல டென்சன் ஆகியிருக்காராம் – இதுக்கா இவர் வேலூர்ல இருந்து வந்தார்.

0
9359
ajith
- Advertisement -

நேற்று (ஏப்ரல் 6)வாக்கு செலுத்த வந்த இடத்தில் செல்பி எடுத்த ரசிகர்களின் செல்போனை அஜித் பிடுங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 6) சட்டமன்ற தேர்தல் படு மும்மரமாக நடைபெற்றுமுடிந்தது. கொரோனா பிரச்சனை காரணமாக வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளி, முகக்கவசம், சாணிடைஸர் என்று அணைத்து வகை பாதுகாப்புகளும் கடைக்கிப்பிடிக்கப்பட்டுஇருந்தது . தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

-விளம்பரம்-

இந்த தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் நேற்று தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்குமாரும் அவரது மனைவி ஷாலினியும் வாக்கு பதிவு துவங்கும் முன்னரே வந்து காத்துக்கொண்டு இருந்தனர்.அப்போது செல்போனில் செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை புடிங்கி வைத்துக்கொண்டு பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த நபரை அழைத்து மாஸ்க் போட சொல்லி செல் போனை திருப்பிக் கொடுத்தார்.

- Advertisement -

இந்த சம்பவம் தான் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக இருந்து வருகிறது. என்னதான் அஜித், அந்த ரசிகர்கரிடம் போனை திருப்பி கொடுத்தாலும். அஜித், அந்த ரசிகரின் போனை உடைத்துவிட்டார் என்ற வதந்திகள் எழுந்தது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அந்த நபர் அளித்துள்ள விளக்கத்தில், என் மொபைலை 2 நிமிஷம் வாங்கி வெச்சிகிட்டாரு. பின் என்னை அழைத்து மாஸ்க் போட சொன்னார். அஜித் என் போனை உடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

உண்மையில் இந்த நபர் அஜித்தை காண வேலூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளாராம். மேலும், இவர் செல்ஃபீ எல்லாம் எடுக்கவில்லையாம் அஜித்தை பார்த்த குஷியில் முகநூலில் லைவ் வீடியோ எடுத்துள்ளார். அதை பார்த்த பின்னர் தான் அஜித் அவரது செல் போனை புடிங்கிவிட்டதாகவும் ஒரு சிலர் கூறுகின்றனர். ஏதோ ஒன்னு அந்த நடிகர் மாதிரி செல் போன தட்டிவிடலேயே.

-விளம்பரம்-
Advertisement