நமீதா பிரச்சாரத்தின் போது ‘தாமரை மலராது’ என கோஷமிட்ட நபரை சரமாரியாக தாக்கிய பாஜகவினர் – வைரல் வீடியோ.

0
1852
namitha
- Advertisement -

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம்கான இருக்கின்றனர். தமிழகத்தின் தற்போதைய முதல்வரும் அதிமுக கட்சியின் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், திமுகவின் கட்சி தலைவர் எம் கே ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் போன்ற பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

அதே போல தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் கட்சியாக இருந்து வரும் பா ஜ கவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் பா.ஜனதா 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  தமிழக பா.ஜ.க-வில், நடிகை நமீதா, காயத்ரி ரகுராம், சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர்கள் தீனா, பரத்வாஜ், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, ஃபெப்சி சிவா என தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இதில் நடிகை நமீதா, கடந்த 2019 ஆம் ஆண்டு தான் பா ஜ கவில் இணைந்தார். இப்படி ஒரு நிலையில் பா ஜ கவை ஆதாரத்தித்து தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கினார் நமீதா. இப்படி ஒரு நிலையில் நடிகை நமீதா, விருதுநகரில் பாரதிய ஜனதா சார்பாக போட்டியிடும் பாண்டுரங்கனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது நடிகை நமீதா தாமரை மலரும் என்று சொல்லும் போது ஆதரவாளர்களும் அப்படியே கோஷமிட்டனர். அப்போது அங்கேய இருந் இளைஞர் ஒருவர், தாமரை மலராது என்று கோஷமிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பா ஜ க தொண்டர்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் பா ஜ க கட்சிக்கு எதிராக பல கோஷங்கள் எழுப்பப்பட்டு தான் வருகிறது. மோடி தமிழகம் வரும்போதெல்லாம் GobackModi என்ற ஹேஷ் டேக்குகள் கூட ட்ரெண்டிங்கில் வந்திருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement