தனது குடும்பத்தோடு வரிசையில் நின்று வாக்களித்த சூர்யா - வைரலாகும் வீடியோ இதோ.

By Rajkumar · 6/4/2021

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 6) சட்டமன்ற தேர்தல் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பிரச்சனை காரணமாக வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளி, முகக்கவசம், சாணிடைஸர் என்று அணைத்து வகை பாதுகாப்புகளும் கடைக்கிப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம்கான இருக்கின்றனர்.

https://twitter.com/BheeshmaTalks/status/1379264121288335360

தமிழகத்தின் தற்போதைய முதல்வரும் அதிமுக கட்சியின் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், திமுகவின் கட்சி தலைவர் எம் கே ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் போன்ற பலரும் கடந்த சில மாதங்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்த தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 6) தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதையும் பாருங்க : வாக்கு செலுத்த வந்த இடத்தில் செல்பி எடுத்த ரசிகர் - செல்போனை புடிங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்ட அஜித். வைரலாகும் வீடியோ.

இன்று காலை 7 மணிக்கெல்லாம் வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு நிறைவு பெரும். வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அதே போல பல்வேறு பிரபலங்களும் காலையிலேயே சென்று வாக்களித்து வருகின்றனர். ரஜனி, அஜித், ஷாலினி, ஸ்டாலின், உதயநிதி போன்ற பலர் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து வந்தனர். அந்த வகையில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தாருடன் வந்து வாக்கு செலுத்தினார். சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சூர்யா வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார்.

https://twitter.com/SuryaFansRage/status/1379262672575811588

மேலும், அவருடன் அவரது தந்தை சிவகுமார் மற்றும் அவரது சகோதரரும் நடிகருமான கார்த்தியும் வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே நடிகர் அஜித் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியோடு வந்து முதல் ஆளாக வாக்கு செலுத்தினார். அப்போது ரசிகர் ஒருவர் தனது செல்போனில் செல்பி எடுக்க தனது முகத்திற்கு முன்னாள் செல்போனை நீட்ட கடுப்பான அஜித், அந்த நபரின் செல்போனை புடுங்கி, தனது பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டார். அந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full