வாக்கு செலுத்த வந்த இடத்தில் செல்பி எடுத்த ரசிகர் – செல்போனை புடிங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்ட அஜித். வைரலாகும் வீடியோ.

0
7055
ajith
- Advertisement -

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 6) சட்டமன்ற தேர்தல் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பிரச்சனை காரணமாக வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளி, முகக்கவசம், சாணிடைஸர் என்று அணைத்து வகை பாதுகாப்புகளும் கடைக்கிப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம்கான இருக்கின்றனர். தமிழகத்தின் தற்போதைய முதல்வரும் அதிமுக கட்சியின் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், திமுகவின் கட்சி தலைவர் எம் கே ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் போன்ற பலரும் கடந்த சில மாதங்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

-விளம்பரம்-

இந்த தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 6) தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கெல்லாம் வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு நிறைவு பெரும். வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அதே போல ரஜினி சூர்யா கார்த்தி உள்ளிட்ட பலர் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இதையும் பாருங்க : திமுககாரங்க மாதிரி இல்ல ‘நான் சாப்டதுக்கு காச வற்புறுத்தி கொடுத்துட்டு வந்தேன்’ – Bjp தலைவர் போட்ட பதிவை மறுத்த ஹோட்டல் நிர்வாகம்.

- Advertisement -

அந்த வகையில் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்குமாரும் அவரது மனைவி ஷாலினியும் வாக்கு பதிவு துவங்கும் முன்னரே வந்து காத்துக்கொண்டு இருந்தனர். அஜித்தை பார்த்த ரசிகர்கள் தல தல என்று கோஷம் போட்டு அவரை சுற்றி நின்று கொண்டனர். கொரோனா அச்சம் இருக்கும் தன்னை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் கொஞ்சம் டென்சன் ஆனார் தல.

அப்போது ரசிகர் ஒருவர், தனது செல்போனில் செல்பி எடுக்க தனது முகத்திற்கு முன்னாள் செல்போனை நீட்ட கடுப்பான அஜித், அந்த நபரின் செல்போனை புடுங்கி, தனது பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டார். பின்னர் அங்கு இருந்தவர்கள் அனைவரையும் போலீசார் வெளியில் அனுப்பினார்கள். அஜித்தும் அங்கு இருந்தவர்களை வெளியில் போக சொல்லி கையசைத்தார். ரசிகர்கள் குவிந்து கூட்டம் சேர்ந்ததால் வாக்குப்பதிவு தொடங்கும் 7 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே அஜித் மற்றும் ஷாலினி இருவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

-விளம்பரம்-
Advertisement