உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ் . உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று உள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் ஒருவர் உட்பட இந்தியாவில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் அவருக்கு கொரோனா சரியாகி விட்டது என்றும் தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தியா முழுவதும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. கேரளாவை சேர்ந்த 3 வயது குழந்தை உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது. கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தற்போது செல் போனில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இந்தியாவில் ல் ‘காலர் டியூன்’ மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்து, செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், அனைத்து செல்போன் நிறுவனங்களும் 30 நொடிகள் ஆங்கிலத்தில் ‘கொரோனா’ விழிப்புணர்வு செய்தியை ‘காலர் டியூனாக’ வடிவமைத்து உள்ளது.இந்த நிலையில் ஹாலிவுட் பிரபல நடிகரான டாம் ஹங்ஸ் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் வந்துள்ளது என்று அவரே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ரீட்டாவும் நானும் இங்கே ஆஸ்திரேலியாவில் இருக்கிறோம். எங்களுக்கு சளி, சில உடல் வலிகள் இருப்பது போல சற்று சோர்வாக உணர்ந்தோம். ரீட்டாவுக்கு அவ்வப்போது குளிர் வந்து போயின. லேசான காய்ச்சலும் கூட. உலகில் இப்போது தேவைப்படுவது போல, விஷயங்களை சரியாகஇருக்கிறதா, நாங்கள் கொரோனா வைரஸுக்கு சோதிக்கப்பட்டோம், மேலும் அவை ஆம் என்று கண்டறியப்பட்டது. அனைவரும் பத்திரமாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement