இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமாவில் பல முன்னணி பிரபலங்கள் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்கள். பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பல நடிகர்கள் தங்களின் ஒரு படத்திற்கு கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபீஸில் அவருடைய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகிறது.
இதற்கெல்லாம் காரணம் அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பது தான். அவர்களுடைய வருமானம் மூலம் இந்தியா சினிமாவில் தங்களுக்கு என்று ஒரு தனி செல்வாக்கை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.
அல்லு அர்ஜுன்:
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அல்லு அர்ஜுன். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. குறிப்பாக, இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த புஷ்பா 2 படம் மிரட்டிக் கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் மூலம் தான் இவருக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவர் 300 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
விஜய்:
தமிழ் சினிமாவில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் தான். கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த கோட் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இவர் தன்னுடைய ஒரு படத்திற்கு 130 முதல் 275 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
ஷாருக்கான்:
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்களுமே மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருக்கிறது. கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த டன்கி படம் பாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டிருக்கிறது. இவர் 150 முதல் 250 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
ரஜினிகாந்த்:
தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக சொல்லிக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கென்றே ஒரு தனி மாஸ் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவருடைய நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திருக்கிறார். கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த வேட்டையன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இவர் 125 முதல் 270 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
அமீர்கான்:
பாலிவுட்டில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அமீர்கான் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் 100 முதல் 275 கோடி வரை சம்பளம் ஆகிறார்.
பிரபாஸ்:
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர். உலகமே திரும்பிப் பார்க்க வைத்த பாகுபலி படத்தின் மூலம் தான் பிரபாஸினுடைய மார்க்கெட் உயரத்தில் சென்றது. இவர் 100 முதல் 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
அஜித்குமார்:
தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது. தற்போது இவர் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு 105 முதல் 165 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
சல்மான் கான்:
பாலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சல்மான்கான் இருக்கிறார். பாக்ஸ் ஆபிஸில் எப்போதுமே இவருடைய படம் வசூல் செய்துவிடும். இவர் 100 முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
கமலஹாசன்:
உலகநாயகன் என்ற பட்டத்துடன் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் கமலஹாசன். இவர் ஒரு படத்திற்கு 100 முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
அக்ஷய்குமார்:
பாலிவுட்டில் பிரபலமான நடிகரான அக்ஷய்குமார் ஒரு படத்திற்கு 60 முதல் 145 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.