மோடி,ஷாருக்கான் வரிசையில் இடம் பிடித்த விஜய்..!வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை..!

By Rajkumar · 23/12/2018

2018 ஆம் ஆண்டு இனிதே நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. இந்நிலையில் இந்தாண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் முதல் இதில் இந்திய பிரதமர் மோடி இருக்கிறார். அவரை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படியுங்க : ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற விஜய்..!

மூன்றாவது இடத்தில அமித்ஷா இருக்கிறார். மேலும், இந்த பட்டியலில் இந்திய நடிகர்களில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் 6வது இடத்திலும் இந்தி நடிகர் ஷாருக்கான் 7 வது இடத்திலும் இருக்கின்றனர்.

இவர்களை தொடர்ந்து நடிகர் விஜய் 8வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே தமிழ் நடிகர் விஜய் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு அடுத்து 9 வது இடத்தில் மகேஷ் பாபு இருக்கிறார்.

சமீபத்தில் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட இந்த ஆண்டின் அதிக சம்பளம் பெரும் பட்டியலில் கூட தமிழ் நடிகர்களில் ரஜினிக்கு பிறகு விஜய்யின் பெயர் தான் இடம்பெற்றது. அதே போல மெர்சல் படத்திற்காக IARA விருதினை கூட பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full