2024 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2024 ஆம் ஆண்டின் உடைய இறுதி நாட்கள் நெருங்கிவிட்டது. ஸ்பாடிஃபை, google போன்ற நிறுவனங்களெல்லாம் இந்த வருடத்தின் உடைய டாப் 10 விஷயங்களை வெளியிட தொடங்கிவிட்டது. இந்த நிலையில் கூகுளில் இந்த ஆண்டு அதிகமாக தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் இரண்டு தமிழ் படங்கள் பிடித்திருக்கிறது.

முதல் இடத்தில் ஸ்த்ரீ 2:
பாலிவுட்டில் வெளியான ஸ்த்ரீ 2 படத்தினுடைய முதல் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் நேச்சுரல் படங்களுக்கு பெயர்போன மாடாக் சூப்பர் நேச்சுரல் யூனிவர்ஸுக்கு கீழ் வந்தது. கோலிவுட்டில் எல்சியூ எப்படியோ அதே போல் தான் இது பாலிவுட்டில் எல்சியூவில் வந்த ஒரே படம்.

இரண்டாவது இடத்தில் கல்கி:
இந்த ஆண்டில் மிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படத்தில் இதுவும் ஒன்று. அமிதாப்பச்சன், கமலஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தினுடைய இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.

மூன்றாவது இடத்தில் 12th ஃபையில்:
இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. இந்த படம் மட்டும் தான் கடந்த ஆண்டு வெளியாகி இந்த ஆண்டு அதிகமாக தேடப்பட்டது. அந்த அளவிற்கு இந்த படம் பலருடைய மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கிறது.
நான்காம் இடத்தில் லாபதா லேடீஸ்:
இயக்குனர் கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான இந்த படம் பலருடைய கவனத்தையும் ஈர்த்து இருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த ஆண்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படத்தில் இதுவும் ஒன்று.
ஐந்தாவது இடத்தில் ஹனுமான்:
இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான படம் ஹனுமான். இந்த படம் மாலிவுட்டில் பிரபலமான ஒரு யுனிவர்ஸ் என்றால் இதை சொல்லலாம். இந்த யுனிவர்சின் அடுத்த திரைப்படமான ஜெய் ஹனுமான் திரைப்படம் உருவாகி வருகிறது.

ஆறாம் இடத்தில் மகாராஜா:
விஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படத்தில் மகாராஜா ஒன்று. கூகுளில் மட்டுமில்லாமல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகமானவர்கள் பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் இந்த படம் டாப் இடத்தில் இருக்கிறது.

ஏழாவது இடத்தில் மஞ்சும்மல் பாய்ஸ்:
மாலிவுட் மட்டுமில்லாமல் கோலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் மஞ்சும்மல் பாய்ஸ்.

எட்டாவது இடத்தில் கோட்:
எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விஜய்யின் கோட் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.
ஒன்பதாவது இடத்தில் சலார்:
இயக்குனர் பிரசாந் நீல் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் சலார்.

பத்தாவது இடத்தில் ஆவேசம்:
நகைச்சுவை கலந்த ஆக்சன் பாணியில் இந்த படம் வெளியாகியிருந்தது. பகத் பாசிலின் நடிப்பு மிரட்டலாக இருந்தது என்றே சொல்லலாம்.






