90 கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளர் இனி 2k கிட்ஸ்களுக்கும் பேவரைட் ஆக போகிறார். என்ன தெரியுமா ?

0
772
top10suresh
- Advertisement -

சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் “டாப் 10 மூவிஸ்”. இந்த நிகழ்ச்சியை சுரேஷ்குமார் என்பவர் தொகுத்து இருந்தார். மேலும், இந்த டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி திடீரென்று நிறுத்தப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. அதோடு டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சியை ஆல் டைம் ஃபேவரட் ஷோ என்று கூட சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் படத்தின் விமர்சனத்தை தொகுத்து வழங்கிய பிறகு தான் இணையங்களில் பரவும். மேலும், 22 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் சுரேஷ்.

-விளம்பரம்-

இவர் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட எபிசோடுகள் தொகுத்து வழங்கி இருக்கிறார். 90 களில் பேவரைட் தொகுப்பாளர் என்றால் இவரை தான் அனைவரும் சொல்வார்கள். அந்த அளவிற்கு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சுரேஷ். இந்நிலையில் தற்போது சுரேஷ் குமார் அவர்கள் நெட்ப்ளிக்ஸ் டாப் 10 என்ற நிகழ்ச்சியை நெட்ப்ளிக்ஸ்க்காக தொகுத்து வழங்கி வருகிறார். இது குறித்து அவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

- Advertisement -

இந்த நிகழ்ச்சியை எடுக்கச் சொல்லி நெட்பிளிக்ஸ் என்னிடம் ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். நானும் ரொம்ப நாள் யோசித்த பிறகு தான் இதை எடுக்க முடிவு எடுத்தேன். அதே போல் 2019ல் டாப் 10 நிகழ்ச்சியும் முடிந்தது. அதற்குப்பிறகு தான் கொரோனா வந்ததால் ஒரு வருடம் எனக்கு கேப் இருந்தது. அப்பவும் என்னுடைய யூடியூப் சேனல்களில் திரைப்படங்கள் குறித்து விமர்சனம் செய்து கொண்டு தான் இருந்தேன்.

`டாப் 10' சுரேஷ்

அதேபோல் நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சியை பண்ண சொன்ன போது ஸ்கிரிப்ட் எல்லாம் நான் தான் பண்ணுவேன் என்று சொல்லிவிட்டேன். ஏன்னா, டாப் 10 பண்ணும் போதே ஸ்கிரிப்ட் ஒர்க் எல்லாம் கற்றுக் கொண்டேன். அதனால் எனக்கு நெட்ப்ளிக்ஸ்ஸில் பண்ணும்போது எளிதாக இருந்தது. மேலும், என்னுடைய ஸ்டைலில் படம் குறித்த விமர்சனங்கள் இருக்குமே தவிர நேரடியாக படம் நல்லா இல்லை என்று திட்ட மாட்டேன். ஏன்னா, அது ஒருத்தருடைய கடின உழைப்பு. படம் எடுப்பது எல்லாம் ஒன்னும் ஈஸியான விஷயம் கிடையாது. அது பல பேருடைய உழைப்பு.

-விளம்பரம்-

அதனால் படத்தை விமர்சனமாக கொண்டு போகலாமே தவிர அவர்களை திட்டி கலாய்க்கிற வகையில் எப்போதும் எனக்கு உடன்பாடு கிடையாது. என் வாய்ஸ் மக்கள் மனதில் பதிந்துவிட்டது. எப்படி எஸ்பிபி குரல் என்றால் எல்லோரும் கொண்டாடுகிறார்களோ, அதேபோல் 90களின் மனதிலும் நான் பதிந்து விட்டேன். மேலும், நிகழ்ச்சியை ரேட்டிங் பண்ண வேண்டாம் என்று நான் சொல்லி விட்டேன். அதுமட்டுமில்லாமல் நெட்பிளிக்ஸ் இடம் ஒரு டீம் இருந்தது. அவர்களிடம் டிஸ்கஸ் பண்ணி தான் ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணினேன். அவர்கள் நான் பேசுவதற்கு எனக்கு முழு உரிமையும் கொடுத்தார்கள்.

நான் எப்பவும் படம் பத்தி பேசிட்டு கடைசியில் ஒரு பஞ்சு சொல்வேன். அந்த பஞ்ச் படத்தின் கதையோடு ஒத்துப் போகணும். பொதுவாகவே ஸ்கிரிப்ட் அளவிற்கு சமமான மெனக்கெடல் என்றால் அது பஞ்ச் எழுதுவதில் தான். அது மட்டுமில்லாமல் நான் எப்போதும் தமிழில் தான் பஞ்சு சொல்வேன். ஆனால், நெட்பிளிக்ஸ்ஸில் ஹாலிவுட், கொரியன் என பல லாங்குவேஜ் படங்கள் வெப்சீரிஸ் என்று வருவதால் அது குறித்து விமர்சனம் பண்ணும் போது கொஞ்சம் ஆங்கிலம் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அதனால் தான் சில பஞ்ச் எல்லாம் ஆங்கிலத்தில் பயன்படுத்தி இருக்கிறேன்.

R. Suresh Kumar (Top 10 Movies) Wiki, Biography, Age, TV Shows, Images -  News Bugz

இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. அதே போல் யூடியூப் பக்கத்தில் பட விமர்சனத்தை பார்த்துவிட்டு அது தொடர்பாக நேரடியாக கமெண்ட் பண்ணி விடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் தவறாமல் ரெஸ்பான்ஸ் பண்ணிடுவேன். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மென்மேலும் வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement