தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்து சம்பளம் குறித்த தகவலை தெரிந்துகொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய டாப் 5 நடிகைகளின் பட்டியல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில்,
நயன்தாரா:
மலையாளத்தில் ஒரு லோக்கல் சேனலில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய நயன் இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். அதுவும் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன் கலக்கி கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
இந்த படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் 1100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இதனை அடுத்து நயன்தாரா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், இந்த வருடத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகளின் பட்டியலில் முதலில் நயன்தாரா தான் இருக்கிறார். இவர் 11 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
திரிஷா:
தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து இருந்தார். அதன் பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பின் சமீபத்தில் வெளிவந்த லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இந்த படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார். இதனை அடுத்து அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்திலும் திரிஷா கமிட் ஆகி நடித்து வருகிறார். தற்போது இவர் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்
தமன்னா:
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தமன்னா. இவர் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த கேடி படம் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் இந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். அதோடு சமீப காலமாகவே இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் 5 முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
பூஜா ஹெக்டே:
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ படம் மூலம் தான் அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை. அதனை தொடர்ந்து இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து இருந்தார். பின் இவர் கடந்த ஆண்டு விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார். பின் பூஜா அவர்கள் பிரபாஸ் உடன் சேர்ந்து ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘ஆச்சார்யா’. தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் இந்த வருடம் ஒரு படத்திற்கு ஆறு கோடி சம்பளம் வாங்குகிறார்.
சமந்தா:
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளுக்கும் மேலாக முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஆனால், இவர் லீட் ரோலில் நடித்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை. அதிலும் இறுதியாக இவர் லீட் ரோலில் நடித்த யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது. அதற்கு பின் கடைசியாக விஜய் தேவர்கொண்டாவுடன் இவர் குஷி என்ற படத்தில் நடித்து இருந்தார். இது சமந்தாவிற்கு ஒரு கம்பேக் படமாக அமைந்து இருந்தது. இதற்கு பின் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. காரணம், இவர் சிகிச்சை மற்றும் மன அமைதியை தேடி கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பதில் இருந்து விலகி சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தாலும் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார். அதோடு சமீபத்தில் தான் சமந்தா சொந்தமாக புரொடக்ஷன் கம்பெனி ஒன்று துவங்கியிருக்கிறார். இவர் 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.