ஒரே ஒரு சீரியலின் மூலம் சன் டிவியை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ்.! இதான் முதல் முறை.!

By Rajkumar · 31/1/2019

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களது TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. 

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும்  ஒரு சில நிகழ்ச்சிகள், ஜீ தமிழ் டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது. 

அந்த வகையில் சமீபத்தில் பிரபல இனைய தளம் ஒன்று இந்த மாதம் அதிக TRP கொண்ட தொடர் எது என்ற தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த மாதம் டாப் 5 இடத்தை பிடித்த தொலைக்காட்சியின் விவரத்தையும் அந்த வலைத்தளம் வெளியிட்டுள்ளது. 

அதில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'செம்பருத்தி' தொடர் சன் டிவியின் அணைத்து தொடர்களையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full