மற்ற சேனல்களை அடித்து நொறுக்கி – Trpயின் டாப் 5 இடத்தையும் பிடித்த சன் டிவி சீரியல்கள்.

0
1860
- Advertisement -

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5வில் இருக்கும் சன் டிவி சீரியல்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது. ஒவ்வொரு சேனலும் புது வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் முதல் இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி திகழ்கிறது. அதேபோல் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல் தான் முன்னிலை வகுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியில் முதல் ஐந்து இடங்களை பிடித்த சீரியல் குறித்து பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் தான் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு காரணம், கடந்த வாரம் ஆதிரை ட்ராக் தான் பரபரப்பாக சென்றது. அதனால் தான் இந்த சீரியல் உச்சகட்டமாக சென்றது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்கள் உரிமையை மையமாக கொண்ட கதை. அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் ஆதி குணசேகரன் ஸ்கோர் செய்து வருகிறார்.

கயல்:

டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் தான் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்தில் சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். பாலச்சந்தரின் படத்தின் கதை தான் இந்த தொடர். தன் குடும்பத்திற்காக ஆசை, சந்தோசம் எல்லாத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை. இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரை பி செல்வம் இயக்குகிறார்.

-விளம்பரம்-

வானத்தைப்போல:

இந்த தொடர் டி ஆர் பி ரேட்டிங்கில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. அண்ணன்- தங்கை சென்டிமென்ட்டை மையமாக கொண்ட கதை. இந்த தொடர் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. சீரியலில் அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி இருக்கிறார்.
தற்போது இந்த சீரியலில் பொன்னி சின்ராசுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார். இன்னொரு பக்கம் தான் கர்ப்பமாக இல்லாத விஷயத்தை வீட்டில் சொல்ல துளசி போராடுகிறார். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

இனியா:

இந்த சீரியல் டிஆர்பியில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. சமீபத்தில் தான் இந்த தொடர் ஒளிபரப்பானது. இந்த தொடரில் ஆலியா மானசா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

மிஸ்டர் மனைவி:

இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் ஐந்தாவது இடத்தை பிடிக்கிறது. இந்த தொடரும் சமீபத்தில் தான் புதிதாக ஒளிபரப்பானது. இந்த சீரியலில் ஹீரோவாக பாவன் ரவிச்சந்திரன், கதாநாயகியாக ஷபானாவும் நடிக்கிறார்கள். இந்த சீரியல் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது சீரியலில் ஷபானாவுக்கும் பாவனுக்கும் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

Advertisement