ஆம், நிவின் பாலின் எனக்கு இந்த முறை வேணும், மின்னல் முரளி டோவினோ முதல் முறையாக சொன்ன உண்மை

0
319
- Advertisement -

நிவின் பாலியும், டோவினோ தாமஸும் சகோதரர்கள் என்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா உலகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் நடிப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும் தெலுங்கு சினிமாவில் தான் வாரிசு நடிகர்கள் எக்கச்சக்கமாக உள்ளார்கள். அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், மாமா, அத்தை என்று எல்லா உறவினர்களும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். மேலும், சிரஞ்சீவி குடும்பம், நாகார்ஜுனா குடும்பம் என்று சொல்லி கொண்டே போகலாலம்.

-விளம்பரம்-

அதிலும் சினிமாவில் இருக்கும் சிலர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று பல பேருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் நிவின் பாலியும், தாமஸும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாம். மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நிவின் பாலி. இவர் பிரேமம் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் தமிழில் மிர்ச்சி எனும் படத்தில் நடித்தார்.

- Advertisement -

டோவினோ தோமஸ்:

ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இருந்தாலும் இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார். இப்படி ஒரு நிலையில் நிவின் பாலி தன்னுடைய சகோதரர் தான் என்று டோவினோ தாமஸ் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மலையாளத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவராக டோவினோ தோமஸ் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக கலக்கி இருப்பார்.

மின்னல் முரளி படம்:

தற்போது மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அதுவும் இவர் நடிப்பில் வாரத்திற்கு ஒரு படமாவது ரிலீஸ் ஆகி விடுகிறது. அந்த அளவிற்கு பிசியான ஹீரோவாக டோவினோ தோமஸ் இருக்கிறார். சமீபத்தில் கூட டோவினோ தோமஸ் நடித்த மின்னல் முரளி படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி இருந்தது. இயக்குனர் பாசில் ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மின்னல் முரளி. இந்த படத்தில் டோவினோ தாமஸ், அஜு வர்க்கீஸ், நம்மூர் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் நம்மூர் பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

டோவினோ தோமஸ் அளித்த பேட்டி:

இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் மலையாள மொழியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்துள்ளனர். இந்தநிலையில் டோவினோ தோமஸ் பேட்டி ஒன்று கொடுத்திருக்காரு. அதில் அவரிடம் நிவின் பாலின் உங்களுடைய சகோதரரா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு டோவினோ தோமஸ் கூறியது, ஆமாம் நிவின்பாலினும், நானும் சகோதரர்கள் தான்.

டோவினோ தோமஸ்- நிவின் பாலின் சகோதரர்கள்:

என்னுடைய அப்பாவின் தங்கையும், நிவின் பாலினுடைய அப்பாவின் தம்பியும் திருமணம் செய்து கொண்டார்கள். அதனால் நாங்கள் சகோதரர்கள் தான் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் கூறிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இத்தனை நாளில் இது தெரியாமல் போச்சே! என்று கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

Advertisement