இஸ்லாத்திற்கு மாறினாரா இளைய மகன் குறளரசன்.! உண்மையை சொன்ன டி ராஜேந்தர்.!

0
1218
Kuralarasan
- Advertisement -

நடிகர் மற்றும் இயக்குனரான டி ராஜேந்தர் மகனும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் தம்பியுமானவர் குறளரசன். இவர் சிறு வயதில் சிம்புவை போல டி ராஜேந்தர் இயக்கிய பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்திலும் கதாநாயகியின் தம்பியாக நடித்திருந்தார். மேலும், இவர் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.மேலும்,  வாலு படத்திற்கு இவர் தான் இசையமைத்திருந்தார்.

- Advertisement -

தற்போது மீண்டும் இசையமைப்பாளராக வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் இஸ்லாம் மதித்திற்கு மாறியுள்ளார்.தனது தந்தை டி ராஜேந்தர் முன்னிலையில் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார்.

குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. ஆனால், இது குறித்து பேசியுள்ள டி ஆர், எனது மகன் மதம் மாறியது உண்மை தான். அவர் விரும்பி தான் இஸ்லாம் மதத்தை தேர்ந்தெடுத்தார் அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். எங்கள் எங்களுக்கு எம்மதமும் சம்மதமே. அதனால் என் மகனின் முடிவை மதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement