டி ஆர் வீட்டின் திருமணம்.! தடபுடலாக நடக்கும் ஏற்பாடு.! பெண் யார் தெரியுமா.!

0
1079
kuralarasan

நடிகர் மற்றும் இயக்குனரான டி ராஜேந்தர் மகனும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் தம்பியுமானவர் குறளரசன். இவர் சிறு வயதில் சிம்புவை போல டி ராஜேந்தர் இயக்கிய பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்திலும் கதாநாயகியின் தம்பியாக நடித்திருந்தார். மேலும், இவர் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.மேலும்,  வாலு படத்திற்கு இவர் தான் இசையமைத்திருந்தார்.

- Advertisement -

தற்போது மீண்டும் இசையமைப்பாளராக வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர், தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் இஸ்லாம் மதித்திற்கு மாறியுள்ளார்.தனது தந்தை டி ராஜேந்தர் முன்னிலையில் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார்.

இந்த நிலையில் குறளரசனுக்கு திருமண ஏற்பாடுகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. குறளரசன் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார் என்றும் அதனால் தான் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார் என்றும் கூறப்பட்டது. எனவே, இவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement