விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் த்ரிஷா கோபமாக சென்றிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து இருந்தார். அதன் பின் இவர் கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், இவர் சமீப காலமாகவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சில மாதங்களாகவே திரிஷா குறித்த சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கிறது. அதில், மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி மோசமாக பேசியிருந்தது வைரலாக இருந்தது. இதற்கு தென்னிந்திய பிரபலங்கள் பலருமே திரிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்கள்.

Advertisement

திரிஷா குறித்த சர்ச்சை:

இது தொடர்பாக மன்சூரலிகான் மீது திரிஷா புகாரும் கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து கூவத்தூர் விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் திரிஷா குறித்து மோசமாக பேசியிருந்தார். பின் இதற்கு திரிஷா எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார். உடனே அவர், திரிஷா மாதிரி ஒரு பொண்ணு என்று அப்படியே பல்டி அடித்துவிட்டார். இந்த பிரச்சனை ஓய்ந்து இருக்கும் நிலையில் சுச்சி லீக்ஸ் வெளியானதற்கு முழுக்க முழுக்க காரணமே திரிஷா தான். இந்த விவகாரத்தின் போது நடிகர் தனுஷுடன் திரிஷா இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் சுசித்ரா வெளியிட்டு இருக்கிறார்.

செய்தியாளர்கள் கேள்வி:

அதுமட்டுமில்லாமல் திரிஷா அடிக்கடி பார்டிகளில் கலந்து கொள்வார் என்றெல்லாம் மோசமாக பேசியிருந்தார். இதற்கு அவருடைய ரசிகர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்தார்கள். இப்படி திரிஷா குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் கிளம்பி இருக்கிறது. இந்த நிலையில் விமான நிலையத்தில் நடிகை திரிஷாவை சந்தித்த செய்தியாளர்கள் அவரிடம் கில்லி ரீ ரிலீஸ் வெற்றிகரமாக செல்வது குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

Advertisement

வைரலாகும் வீடியோ:

அதற்கு திரிஷா எந்த பதிலும் சொல்லாமல் கோபத்துடன் வேக வேகமாக சென்றிருக்கிறார். கில்லி படத்தின் ரீ ரிலீஸ் குறித்து சோசியல் மீடியாவில் சந்தோசமாக பதிவு போட்ட திரிஷா செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் கோபத்துடன் சென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு திரிஷா அவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகியிருந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

திரிஷா திரைப்பயணம்:

இந்த படத்தின் மூலம் திரிஷாவிற்கு இன்னும் ரசிகர் கூட்டம் உருவானது என்று சொல்லலாம். இதனை அடுத்து த்ரிஷா நடித்த ராங்கி படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதற்கு பின் திரிஷா அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆதி, திருப்பாச்சி,கில்லி, குருவி போன்ற பல படங்களில் இருவரும் இணைந்து நடித்து இருந்தார்கள். அதன் பின் 14 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா, விஜய் உடன் இணைந்து லியோ படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement