வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் வித்யாசமான கதைகளை எடுப்பதில் கைத்தேர்ந்தவர். இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார். மேலும், இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறுகிறது. அதுமட்டும் இல்லாமல் டாட்டியா மாவட்டத்தின் ஓர்ச்சா, குவாலியர் கோட்டைகளை அடுத்து இந்தோர் மாவட்டத்தின் ஹரிகேஷ்வரிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இங்கு நர்மதா நதிக்கரையில் ராணி அகில்யா பாய் கோட்டையும், அவரால் அமைக்கப்பட்ட சிவன் கோயில்களிலும் கடந்த 5 நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகர் கார்த்தி, ரகுமான், த்ரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஹரிகேஷ்வரின் நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைந்துள்ளன.

இதையும் பாருங்க : மாஸ்டர மட்டும் அப்படி ரிலீஸ் பண்ணீங்க என் படத்த பண்ண மாடீங்களா – கங்கனா காட்டம்

Advertisement

இவை இந்துக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று அக்கரையில் ஒரு படகில் த்ரிஷா வருவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அங்கு தரையிலிருந்த ஒரு நந்தி மற்றும் சிவலிங்கத்திற்கு இடையே த்ரிஷா நடந்து வரும் காட்சி இடம்பெற்றது.ஆனால், திரிஷா அவர்கள் காலணி போட்டுக்கொண்டு நடந்து வந்து உள்ளார். இதனால் சிவலிங்கம் அவமதிக்கப்பட்டதாகவும், இதற்காக த்ரிஷாவையும், இயக்குநர் மணிரத்னத்தையும் கைது செய்ய வேண்டும் என்று ஹரிகேஷ்வரின் இந்து அமைப்புகள் போராட்டம் செய்து உள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக ஹரிகேஷ்வர் காவல் நிலையத்தில் இந்து அமைப்புகள் புகார் அளித்து உள்ளனர். இது குறித்து இந்து அமைப்புகள் கூறியது, இங்குபடப்பிடிப்புக்காக வருபவர்களுக்கு நாங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். ஆனால், சில பேர் எங்கள் இந்துமதத்தை அவமதிப்பது போன்ற சில செயல்களை செய்கிறார்கள்.

Advertisement

நடிகை திரிஷா இந்துக்களின் கடவுள் என்ற மதிப்பு இல்லாமல் சிவலிங்கம் பக்கத்தில் காலணி அணிந்து வந்தார். அதன் காரணமான இயக்குநர் மணிரத்னம் மற்றும் திரிஷா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். இல்லையெனில் நீதிமன்றம் வரை சென்று அவர்களை கைது செய்ய வைப்போம். அதோடு இதுபோல் அவர்கள் மசூதி, தேவாலயங்களில் செய்ய முடியுமா? என்று ஆக்ரோஷமாக கூறினார்கள். இதற்கு முன் பாலிவுட் நடிகர் சல்மான்கானும் இந்த செயலை செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நடிகை த்ரிஷா தரப்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை.

Advertisement
Advertisement