தன் போஸ்டரை பார்த்து பச்சிளம் குழந்தை செய்த செயல் – உருக்கமுடன் திரிஷா பதிவிட்ட வீடியோ.

0
519
- Advertisement -

அன்போடு தனக்கு முத்தம் கொடுத்த குழந்தைக்கு திரிஷா பதிவிட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து இருந்தார். அதன் பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Trisha

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதிலும், திரிஷா அவர்கள் சமீப காலமாகவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால், நயன்தாரா அளவிற்கு லீட் கதாபாத்திரங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை. இருப்பினும், நயன்தாராவிற்கு இணையாக தமிழ் திரையுலகில் இன்றும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் இருந்து வருகிறார் திரிஷா.

- Advertisement -

திரிஷா திரைப்பயணம்:

தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருக்கிறார். பல ஆண்டு கனவான சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படம்:

அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், ராய், ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

திரிஷா நடிக்கும் படங்கள்:

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார் என்றே சொல்லலாம். பொன்னியின் செல்வன் திரைப்படம் திரிஷாவிற்கு தமிழ் சினிமா உலகில் ஒரு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதனை அடுத்து திரிஷா அவர்கள் விஜயின் தளபதி 67 என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

திரிஷா வெளியிட்ட வீடியோ:

ஆனால், இதுவரை திரிஷா நடிப்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. கர்ஜனை, தி ரோடு, சரவணன் இயக்கத்தில் ராங்கி போன்ற பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் திரிஷாவின் பேனரை பார்த்து குழந்தை முத்தம் கொடுத்திருக்கிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதை பார்த்த திரிஷா, கண்ணீர் இமேஜ் உடன் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement