சமந்தாவின் முன்னாள் காதலருடன் மீண்டும் இணையப்போகும் நடிகை த்ரிஷா.!

0
1626
Thrisha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. இவர், பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், நாக சைதன்யாவை காதலிப்பதற்கு முன்பாகவே சமந்தா பிரபல நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்ததாக ஆதாரமான கிசுகிசுக்கள் நிலவி வந்தது.

-விளம்பரம்-
Image result for Trisha samantha

சில வருடங்கள் நிலைத்து வந்த இவர்கள் காதல் அதன் பின்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக முறிந்து விட்டது. இந்த நிலையில் நடிகர் சித்தார்த் நடிக்கும் புதிய படத்தில் நடிகை திரிஷா நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்தியில் கடந்த ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘அண்டாதும்’ என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் சைனாவில் வெளியாகி 200 கோடி ரூபாய் வசூல் செய்தது. சைனாவில் 200 கோடி வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது.

Image result for siddharth and trisha

இந்தப் படத்தை தற்போது தமிழில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சித்தார்த் மற்றும் த்ரிஷா இருவரும் ஆயுத எழுத்து, அரண்மனை போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement